இனிக்க இனிக்க நலன் தரும் சப்பாத்திக்கள்ளி.. குழந்தை பேறு வழங்கும் சப்பாத்தி கள்ளி பழங்கள்.. சூப்பர்
சென்னை: முட்கள் நிறைந்த இந்த சப்பாத்தி கள்ளிதான், குழந்தை இல்லையே என்று ஏங்கி தவிப்பவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்து வருகிறது.. அதெப்படி?
வறட்சி நிறைந்த பகுதியில், கரடுமுரடு முட்களுடன் காணப்படும் இந்த சப்பாத்தி கள்ளிகள்.. ஆனால், வைட்டமின் C, B, ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள், தாவர ஊட்டச்சத்துகள், கால்சியம், மெக்னீசியம் , பீட்டா கரோட்டின் ஏன ஏகப்பட்ட சத்துக்களை தன்னுள் வைத்திருக்கிறது இந்த வறண்ட சப்பாத்தி கள்ளிகள்.

தித்திப்பு பழம்: இதனை இந்தியாவின் கிவி என்பார்கள்.. நாகதாளி என்றும் சொல்வார்கள். சப்பாத்தி கள்ளிப்பழம் பார்ப்பதற்கு சிவப்பு கலரில் இருக்கும். தித்திப்பாக இருக்கும்..
வறண்ட நிலங்களில் ஆடு மாடு மேய்க்கும் விவசாயிகளுக்கு இந்த பழம்தான், புத்துணர்ச்சியையும், குளிர்ச்சியையும் தந்து பேருதவி புரிகிறது.. பழங்குடியினர் இன்றுவரை சிறந்த உணவாக இந்த சப்பாத்தி கள்ளியை பயன்படுத்தி வருகிறார்கள். பொட்டாசியம் அதிகமாக உள்ளதால், ரத்த அழுத்தம் அதிகமாகாமல் சீராக வைத்து கொள்ள இப்பழம் உதவுகிறது..
முட்கள் பழம்: இந்த பழத்தை பறிப்பதே பெரிய கஷ்டம்.. காரணம், குட்டி குட்டியாக நிறைய முட்கள் நிறைந்திருக்கும்.. அதனால், இந்தப் பழத்தின் தோலை நீக்கிவிட்டே சாப்பிட வேண்டும்.. அல்லது இந்த சப்பாத்தி கள்ளி பழத்திலிருந்து ஜூஸ் செய்து குடிக்கலாம்.. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும். பிறகு, முட்களை விலக்கி, எடுக்கப்பட்ட வெறும் பழத்தை, அந்த தண்ணீரில் போட்டு 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
இப்போது, தண்ணீரிலிருந்து சப்பாத்தி கள்ளியை வெளியே எடுத்து வைத்து, ஆறவிட்டு, அதன் தோலை நீக்கி, சிறுசிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும். இதில், எலுமிச்சை ஜூஸ், ஆரஞ்சு ஜூஸ், இளநீர் போன்றவற்றை சேர்த்து, மிக்ஸியில் அரைத்து, இறுதியில் வடிகட்டி குடிக்கலாம்.
உடல் எடை: உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், இந்த சப்பாத்தி கள்ளி பழத்தை தாராளமாக கையிலெடுக்கலாம்.. காரணம், மிகக்குறைந்த கலோரிகள் இதில் உள்ளன.. இதனால், கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது.. கொழுப்பு படிவதை தடுப்பதால், இதயம் காக்கப்படுகிறது.. செரிமானம் அதிமாவதால், மலச்சிக்கல் தீர்ந்து, குடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது. அத்துடன், பெருங்குடலை சுற்றியுள்ள நச்சுக்களும் வெளியேறுகின்றன.
பெண்கக்கு இந்த சப்பாத்தி கள்ளி அருமருந்து என்றே சொல்லலாம்.. காரணம், மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் அடிவயிற்று வலியை தடுக்கிறது.. அதுமட்டுமல்ல, இன்றைய காலக்கட்டத்தில் பெண்களுக்கு பிசிஓடி என்ற கருப்பை நீர்க்கட்டி பிரச்சினை அதிகமாகி கொண்டிருக்கிறது.. இது கருமுட்டையை பலமில்லாமல் போகச்செய்து, குழந்தை பேற்றில் சிக்கலை உண்டாக்கிவிடும்..
கருச்சிதைவு: சிலசமயம் கருச்சிதைவையும் உண்டுபண்ணிவிடும். இந்த சினைநீர்க்கட்டிகளை கரைப்பதற்கு உதவுவதுதான் இந்த சப்பாத்தி கள்ளி பழம்.. வாரம் 3 முறை சாப்பிட்டுவந்தால், கர்பப்பையில் இருக்கும் நீர்க்கட்டிகள் அழிந்து விடும்.
இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால், குழந்தைப்பேறு உண்டாவதுடன், கரு முட்டை வளர்ச்சியும் சீராகும். அதுவும் கர்ப்ப காலத்தில், இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால், குழந்தை சிவப்பமாக பிறக்கும் என்பார்கள். அதாவது, குங்குமப்பூவை விட, இந்த சப்பாத்திக்கள்ளி பழம் பெஸ்ட் என்றே சொல்லலாம்.
குழந்தை பேறு: பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் இந்த சப்பாத்தி கள்ளி தரும் நன்மைகள் ஏராளம்.. விந்து உயிரணுக்கள் ஆரோக்கியமாக இல்லாமல் இருந்தால், இந்த பழம் அவர்களுக்கு கை கொடுக்கும்.. ஆனால், குழந்தை பேறுக்காக இந்த பழத்தை சாப்பிடுபவர்கள், டீ, காபி சாப்பிடக்கூடாது என்பார்கள்.. எனினும் இதுகுறித்து மருத்துவர்களின் ஆலோசனையை கட்டாயம் பெற்றே சாப்பிட வேண்டும்.












Click it and Unblock the Notifications