கறிவேப்பிலையின் ஆச்சரியம்.. செம்பட்டை தலைமுடி? நீங்க இதை மட்டும் ட்ரை பண்ணுங்க.. கருகரு முடி வளரும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தலைமுடி கொட்டுவது மட்டுமல்ல, செம்பட்டை தலைமுடி, வறண்ட தலைமுடி போன்றவை எல்லாமே மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்திருக்கின்றன.. எனினும், இவைகளுக்கு சூப்பர் தீர்வுகள் நம்மிடமே, நம் கையிலேயே உள்ளன. இதோ குட்டி டிப்ஸ்கள்:

நம்முடைய தலைமுடி கொட்டுவதற்கு பல காரணங்கள் உள்ளன.. குறிப்பாக ஹார்மோன் குறைபாடுகள் முக்கிய காரணமாக திகழ வாய்ப்புள்ளது. ஹார்மோன்கள் சரியாக இருந்தாலே, நம்முடைய முடிகள் அடர்த்தியாகவும், ஆரோக்கியமாகவும் வளரும்.

hair growth curry leaves hair fall

இரும்புச்சத்து, கால்சியம் போன்ற சத்துக்கள் குறைவாக இருப்பதால் தலைமுடி கொட்டலாம். எனவே, ரத்த விருத்தியை அதிகப்படுத்தி, ஹீமோகுளோபின் அளவையும் சரியாக வைத்து கொள்ள வேண்டும்.

மன அழுத்தம்: அடுத்ததாக, நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடுகள் உடலில் இருந்தாலும் முடி கொட்டலாம்.. சத்தான உணவுகள் மட்டுமே இதற்கு மருந்தாகும்.. அடுத்ததாக, அளவுக்கதிகமான மன அழுத்தம் காரணமாகவும் தலைமுடி கொட்டலாம். இதற்கு நிம்மதியான தூக்கம், அமைதியான மனநிலைமை, போதுமான தண்ணீர் போன்றவையும் மருந்தாகின்றன.

அதேபோல, பிசிஓடி எனப்படும், நீர்க்கட்டிகள் பிரச்சனைகள் இருந்தாலும், பெண்களுக்கு முடி கொட்டலாம். அதிகமாக உடலில் உஷ்ணம் ஏற்பட்டுவிட்டாலும், தலைமுடி அதிகமாக கொட்டலாம்.

தலைமுடிகள்: செம்பட்டை தலைமுடிகள் ஏற்படுவதற்கும் நிறைய காரணங்கள் உண்டு.. அதிகபடியாக வெயிலில் தலைமுடி படும்போது, புற ஊதாக்கதிர்கள் அல்ட்ரா வயலட் A, B இந்த சேதம் ஏற்படுகிறது.. வெயிலில் வேலை செய்பவர்களுக்கு இந்த பிரச்சனையை தொடர்ந்து எதிர்கொண்டு வருகிறார்கள்.

நீச்சல் குளத்தில் குளோரின் கலந்த நிரல் குளிக்கும்போதும் தலைமுடி நிறம் மாறுகிறது.. தலைமுடிக்கு பிளீச்சிங் செய்வது, ஸ்ட்ரெய்ட்னிங் செய்து, ஃப்ர்ம் செய்வது, டை அடிப்பது என செயற்கைத்தனங்களை செய்யும்போதும், அதிகப்படியான கெமிக்கல்கள் காரணமாகவும் சிலருக்கு செம்பட்டை வரலாம்.

கொழுப்பு அமிலங்கள்: எனவே, நம்முடைய தலைமுடிக்கும், நாம் சாப்பிடும் உணவிற்கும் நேரடியாக தொடர்பு உள்ளது.. எனவே, இரும்புச்சத்து, ஜிங்க், கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள் நிறைந்த உணவை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும்.

முருங்கைக்கீரை சூப் அல்லது ரசம் வைத்து சாப்பிடும்போது, ரத்தவிருத்தி அதிகமாகிறது. ஆரோக்கியமான முடிகள் கிடைப்பதுடன், நீளமாகவும், அடர்த்தியாகவும் வளரும். அல்லது வெறுமனே முருங்கைக் கீரையை ஒரு கைப்பிடி எடுத்து, ஒரு கப் தண்ணீர் ஊற்றி அரைத்து வடிகட்டி, எலுமிச்சை பழச்சாறு, தேன் சேர்த்து கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். முருங்கையின் ஈர்க்குச்சிகளிலும் சூப் செய்து குடிக்கலாம்..

கறிவேப்பிலை: கறிவேப்பிலைகளில் சட்னி, துவையல் செய்து சாப்பிடலாம். எந்த சமையலிலும் கறிவேப்பிலையை தவிர்க்கக்கூடாது. வைட்டமின் A அதிகமுள்ள உணவான, கீரை, கேரட், தக்காளி, உருளைக்கிழங்கு, பால், முட்டை, மாம்பழம், பப்பாளி, தர்பூசணி இப்படியான உணவுகளை தினமும் சாப்பிட வேண்டும். எலுமிச்சை ஜூஸ், நெல்லிக்காய் ஜூஸ் ஏதாவது ஒன்றை சாப்பிட்டு வரவேண்டும்.

பீட்ரூட் சாறு, கேரட் சாறு இரண்டையும் சம அளவு கலந்து தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து தலையில் தேய்த்துவர செம்பட்டை நிறம் மெல்ல மறையும். அதேபோல, செம்பருத்தி பூவை நல்லெண்ணெயில் காய்ச்சி தடவி வந்தாலும் முடியின் செம்பட்டை நிறம் மறையும்.

செம்பருத்தி: அதேபோல, செம்பருத்தியை தேங்காய் எண்ணெயுடனும் காய்ச்சி தலைக்கு தடவி வரலாம். செம்பருத்தி பூக்களையும், செம்பருத்தி இலைகளையும் கழுவி அதை ஈரமில்லாமல் அரைக்க வேண்டும்.. ஒரு பாத்திரத்தில், தேங்காய் எண்ணெய் ஊற்றி லேசாக சூடானதும், அதில், இந்த செம்பருத்தி விழுதை கொட்டி, வெந்தயத்தையும் தூள் செய்து போட்டு, கருகாமல் கொதிக்கவிட வேண்டும். இந்த எண்ணெய்யை வடிகட்டி தலைக்கு பயன்படுத்தலாம்.

நெல்லிக்கனியை இரவு முழுவதும் ஊறவைத்து, மறுநாள் எலுமிச்சம் சாறு கலந்து தலைக்கு தேய்த்து குளிக்க வேண்டும். இப்படி ஒரு வாரம் செய்தால், நல்ல பலன் கிடைக்கும்.

மோர்: தலைமுடியை எப்போது அலசினாலும், சாதம் வடித்த தண்ணீரில் அலசி வரலாம்.. அல்லது மோரில் அலசி வரலாம்.. நீர் மோரில் லாக்டிக் அமிலம், கார்போஹைட்ரேட், புரதம், வைட்டமின் D, A, B12, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, பொட்டாசியம், சோடியம், மக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன.. உச்சந்தலையில் இந்த மோரை தேய்த்து, மசாஜ் செய்து 20 நிமிடம் ஊறவைத்து குளித்தால் போதும்.. இறந்த செல்களை நீக்கி, தலைமுடி வளர்ச்சிக்கு உதவுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+