ஆரோக்கியம் நிறைந்த மீன்கள்.. இறால் எடுக்குறீங்களா? சாளை மீனின் ஸ்பெஷாலிட்டீஸ்.. சத்துக்கள் அடங்கியவை
சென்னை: மீன்களை சாப்பிடுவதால் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்னென்ன தெரியுமா? மற்ற அசைவு உணவுகளில் இல்லாத சத்துக்கள் மீன்களில் என்னென்ன உள்ளன? எந்தவகையான மீன்கள் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடியவை? சுருக்கமாக பார்ப்போம்.
புரோட்டின், வைட்டமின், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, அயோடின், மெக்னீசியம் என பல சத்துக்கள் மீனில் உள்ளன. அதிலும் சிலவகை மீன்களில் ஒமேகா 3 சத்து சற்று அதிகமாகவே இருப்பதால்தான், மிகச்சிறந்த உணவாக மீன்கள் திகழ்கின்றன.

மீன்களை தொடர்ந்து சாப்பிட்டு வரும்போது, இதய நோய்கள் நெருங்குவதில்லை.. ரத்தக்குழாய் மற்றும் இதயத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் தவிர்க்கப்படுகின்றன.
இதய ஆரோக்கியம்: வாரம் 2 முறை மீன் சாப்பிடுவதால், ரத்தக்குழாய் மற்றும் இதயத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் சீராகின்றன.. இதயம் சீராக இருந்தாலே மாரடைப்பு, பக்கவாதம் போன்ற அபாயங்கள் குறைந்துவிடும். அதுமட்டுமல்ல, இதய நோய், பக்கவாதம் பாதிப்பு உள்ளவர்களும் மீன்களை சாப்பிடுவதால், இதய சிக்கல்களிலிருந்து தப்ப முடியும் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.
இதற்கெல்லாம் காரணம், மீன்களிலிலுள்ள ஒமேகா 3 என்ற கொழுப்பு அமிலம்தான். நம்முடைய உடலால் ஒமேகா -3 கொழுப்பு அமிலத்தை தானே உற்பத்தி செய்ய முடியாது.. பெரும்பாலும் உணவின் மூலமே இதை நாம் பெற முடியும்..
மூளை ஆரோக்கியம்: நம்முடைய உடல் எடையை சீராக வைத்து கொள்ள உதவுவதே இந்த அமிலம்தான். இதயம், மூளை, கண்களின் ஆரோக்கியத்திற்கு துணை புரிகின்றன. மன அழுத்தம், மன இறுக்கம் போன்றவற்றினால் ஏற்படும் பாதிப்புகளை இந்த அமிலம் குறைக்கின்றன.. கண், காது சம்பந்தமான நோய்களுக்கு வழங்கப்படும் மருந்துகளில் ஒமேகா 3 இருக்கின்றன. அதனால்தான் நேரடியாகவே மீன்களை உணவாக எடுத்து கொள்ள நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். காலா, வஞ்சிர மீன்களில் ஒமேகா 3 என்ற சத்து அதிகமாக உள்ளன.
8 வார காலத்தில், மீன்களை மட்டுமே சாப்பிட்டவர்களின் உடல் எடை குறைந்திருப்பதாக ஆய்வுகள் நிரூபிக்கின்றன. அதனால், அதிக எடை கொண்டவர்கள், ஒமேகா 3 உட்பட புரோட்டீன் நிறைந்த சால்மன், டிரௌட், மத்தி, டுனா மற்றும் கானாங்கெளுத்தி என்ற அயிலை, முரல் மீன், சங்கரா மீன், மத்தி, சாளை, நெத்திலி, சூரை போன்ற மீன்களை தேர்ந்தெடுத்து சாப்பிடலாம்.
ஆரோக்கியம்: ஆரோக்கியமான கொழுப்புகள், புரதம் மற்றும் செலினியம் கானாங்கெளுத்தி மீனில் காணப்படுகிறது. இது நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கும், தைராய்டு செயல்பாட்டிற்கு நன்மை தரக்கூடியது. மத்தி மீனில் பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளதால், நரம்பு மண்டல செயல்பாட்டுக்கு நல்லது.
நெத்திலி, சங்கரா மீன், அயலை, கானாங்கெளுத்தி போன்ற மீன்களை, 100 கிராம் முதல் 200 கிராம் வரை வாரம் 2 முறையாவது சாப்பிடலாம். சரும ஆரோக்கியம், தலைமுடி வளர்ச்சி பெற வேண்டுமானால், சால்மன், மத்தி, கானாங்கெளுத்தி மீன்களை தேர்ந்தெடுக்கலாம்..
முடக்குவாதம்: வைட்டமின் D சத்துக்கள், கால்சியம் சத்துக்கள் உள்ளதால், எலும்புகளும், பற்களும் உறுதியாகின்றன. கெட்ட கொழுப்புகளை குறைப்பதுடன், கெட்ட கொழுப்புக்களை உடலில் சேர்வதை தடுக்கக்கூடியவை மீன்கள். எனவே, மீன்களை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு, நீரிழிவு நோய், முடக்குவாதம் போன்ற நோய்கள் தாக்குவதில்லை. முடக்குவாதத்தில் ஏற்படும் வீக்கத்தையும், அதன் வலியையும் குறைக்க முடியும்
மனித மூளையின் பல்வேறு செயற்பாடுகளுக்கு அவசியத்தேவையாக இருக்கும் கொழுப்பு அமிலங்கள் மீன்களில் அதிக அளவு இருப்பது மிக முக்கியமான தன்மையாகும்.. மன அழுத்த நோய் உருவாவதற்கு பல்வேறு காரணிகள் இருப்பதால், கூடுதலான மீன் உணவு சாப்பிட்டால் மன அழுத்த நோய் வராமல் தடுக்கலாம் என்றும் ஆய்வுகள் தொடர்ந்து கூறுகின்றன. அதுமட்டுமல்லாமல், மீன் உணவு வகைகளை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் வயதான பெண்களுக்கு ஏற்படும் இதயநோய் அபாயமும் குறைகிறதாம்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications