ஆட்டுக்கறி வாங்கறீங்களா? எது பெஸ்ட் மட்டன் தெரியுமா? இதை தெரிஞ்சிட்டு போங்க.. ஆட்டிறைச்சியில் இவ்ளோ?
சென்னை: ஆட்டுக்கறி வாங்கும்போது, அதை எப்படி வாங்க வேண்டும் தெரியுமா? "இளம் ஆட்டுக்கறி" என்று கேட்டு வாங்குவோமே தவிர, முக்கியமான விஷயங்களை நாம் கவனிக்க தவறிவிடுகிறோம் என்பதே உண்மை.
ஆடாக இருந்தாலும்சரி, கோழியாக இருந்தாலும் சரி, ஆண் + பெண் இவற்றில், அதிக ருசியே பெட்டி ஆட்டுக்குத்தான், பெட்டை கோழிக்குதான்.

ஆரோக்கியமான ஆடாக இருந்தால், வெட்டும்போதே அதன் உடலில் மொத்த ரத்தமும் வடிந்துவிழுந்துவிடும்.. ஒரு சொட்டு ரத்தமும், அதன் உடம்பில் தங்கியிருக்காது. ஒருவேளை இறந்து போனபின் அந்த ஆட்டை வெட்டியிருந்தால், ரத்தம் வடிந்து போகாமல், உடலிலேயே படிந்திருக்கும். நல்ல மட்டனா? கெட்ட மட்டனா? என்பதை அறிந்து கொள்ள முதலில் உதவுவதே இந்த ரத்தம்தான்.
சந்துக்கறிகள்: ஆட்டின் நெஞ்சுப்பகுதியில் உள்ள தசைகள் மிகவும் மென்மையானதாக இருக்கும்.. தொடை, சந்துக்கறிகள் அதிகமாக இருக்கும்படி பார்த்து வாங்க வேண்டும்.
கறியை தொட்டுப்பார்த்து வாங்க வேண்டும்.. அதாவது, கறியின் விரல்களை வைத்து லேசாக அழுத்திவிட்டு, கையை எடுத்துவிட வேண்டும். அப்போது, பலூன் போல மீண்டும் பழைய அமைப்பிற்கே வரும் பட்சத்தில், அது நல்ல கறி என்று கண்டுகொள்ளலாம்.. கையை வைத்து அழுத்திய இடத்தில் பள்ளம் போல அப்படியே அமுங்கி விட்டால், அந்த கறியை வாங்க வேண்டாம்.
எப்படி வாங்க வேண்டும்: அதேபோல, மட்டனில் தோல் பகுதியை நீக்கிவிட்டு வாங்க வேண்டும. காரணம், தோல் பகுதிகளில் அதிக கலோரிகள் நிறைந்திருக்கும்.. இதுதான், இதய கோளாறுகளுக்கும் காரணமாகின்றன.. அதனால், தோல் பகுதியை நீக்கிவிட்டு வாங்க வேண்டும்.. மேலும், கறியின் மேல், கொழுப்புசத்துக்களுடன் நிறைந்த வெள்ளை நிற கோடுகள் இருந்தால், அதை வாங்கலாம். இந்த கறிகள் அதிக சுவையை தரும்..
அதேபோல, ஆட்டுக்கறி வெட்டப்பட்டு, அதை வாங்கிவந்து சமைத்தாலும், குறிப்பிட்ட நேரத்திற்குள்தான் சாப்பிட வேண்டுமாம்.. அதாவது, ஆட்டினுடைய தலையை துண்டித்து, கொஞ்ச நேரம் மட்டும்தான், அதனுடைய உயிர் செல்கள் இருக்கும்..
கிட்டத்தட்ட 20 நிமிடம் முதல் அரை மணி நேரம் அந்த உயிர் துடிப்புகள் இருக்கும். துடிப்பு நின்ற பிறகும் சில மணி நேரங்கள் அந்த செல்கள் இருக்கும்.. எப்படியும், ஆடு வெட்டப்பட்டு, 5 மணி நேரத்திற்குள் வாங்கி, சுத்தம் செய்து, சமையலும் செய்து, சாப்பிட்டு முடித்திட வேண்டுமாம்.
மட்டனை வாங்கி பல மணி நேரம் கழித்து சமைப்பது, ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து சமைத்து சாப்பிடுவதெல்லாம், அழுகிப்போன கறிக்கு சமம் என்கிறார்கள்.. மட்டன் விற்கிற விலையில், என்றோ ஒருமுறைதான் சமைத்து சாப்பிட வேண்டியிருக்கும்போது, அதையும் சத்தாக சாப்பிட முயற்சிக்கலாமே என்கிறார்கள் நிபுணர்கள்.
எது பெஸ்ட்: ஆட்டுக்கறியில் எது பெஸ்ட்? எப்படி மட்டனை சமைத்தால், ஆபத்து கிடையாது தெரியுமா? நாம் 2 வகையான மட்டனை சாப்பிடுகிறோம்...செம்மறி ஆட்டுக்கறி + வெள்ளாட்டுக்கறி என்று இரண்டு வகையான மட்டன்களை சமைத்து உண்கிறோம்... செம்மறி ஆட்டில், வெறும் 100 கிராமை எடுத்துக் கொண்டால், அதில், 300 காலரிகள் இருக்கிறது.. கொழுப்பு மட்டுமே 20 கிராம் உள்ளது.. புரோட்டீன் 25 கிராமும், கொலஸ்டிரால் 100 மி.கிராமும் உள்ளது.
ஆனால், வெள்ளாட்டில் அப்படியில்லை.. 100 கிராமில் 130 காலரிதான் இருக்கிறது.. கொழுப்பு 3 கிவெள்ளாடு: ராம்தான் உள்ளது.. புரோட்டீன் 27 கிராம் உள்ளது.. அதனால், இவைகளில் வெள்ளாடுதான் சிறந்தது.. இந்த மட்டன்களிலுமே இரும்பு, துத்தநாகம், வைட்டமின் பி-12 என சத்துக்கள் சமமாக இருந்தாலும்கூட, காலரிகளில் வித்தியாசப்படுகிறது. அதனால், வெள்ளாட்டை பயன்படுத்துவது நல்லது. இதை சாப்பிட்டாலும் மாரடைப்பு வரத்தான் செய்யும்.
நிறைய எண்ணெய் நிறைய சேர்த்து மட்டனை சமைக்க கூடாது.. டீப் ஃப்ரை செய்தும் சாப்பிடக்கூடாது.. குறைவான எண்ணெய்யில் வேக வைத்தோ அல்லது கிரில் செய்தோ அல்லது கிரேவியாகவோ அல்லது சூப்பாகவே செய்து சாப்பிட்டால், சத்துக்கள் வீணாகாமல் கிடைக்கும். ஆனால், மட்டன் சாப்பிடும்போது கண்டிப்பாக, நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகமாக சேர்த்து கொள்ள வேண்டும்..
முருங்கைக்காய்: ஆண்களுக்கு 40 கிராமும், பெண்களுக்கு 30 கிராம் நார்ச்சத்தும் எடுத்தே ஆக வேண்டுமாம். அதனால், கேரட், பீன்ஸ், வாழைக்காய், முருங்கைக்காய், காலி பிளவர், தோல் இருக்கும் உருளைக்கிழங்கு போன்றவைகளுடன் சேர்த்து மட்டன் சமைக்கும்போது, மட்டனில் உள்ள கொழுப்புக்கள் உறிஞ்சப்பட்டுவிடும்..
பிறகு, வெங்காயம் + தக்காளி போன்றவைகளை சாலட் போலவும் சேர்த்து சாப்பிட வேண்டும்.. காரணம், இந்த நார்ச்சத்துக்கள் மட்டனுடன் இணைந்து வேகமாக கொழுப்பை எரித்துவிடும். அதனால் நார்ச்சத்துடன் மட்டன் எப்போதாவது சாப்பிடலாம்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications