கேன்சர் அண்டாது.. புண்கள், கொப்புளங்கள் ஆறணுமா? இந்த சூப்பர் "இலை" போதும்.. நீரிழிவு நோயும் ஓடிரும்
சென்னை: சீதாப்பழங்களை போலவே, சீதாப்பழ கொட்டைகளை போலவே, சீதாப்பழத்தின் இலைகளும் மருத்துவ சக்தி நிறைந்தது.. அதனை எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா?
சீதாப்பழத்தில் வைட்டமின் B, மக்னீசியம், வைட்டமின் C, நார்ச்சத்து, இரும்புச்சத்து நிறைந்துள்ளன.. மூட்டு வலி, முழங்கால் வலி உள்ளவர்களுக்கும், ஆர்த்ரைட்டீஸ் பிரச்சனை இருப்பவர்களுக்கும் சீதாப்பழம் தீர்வை தருகிறது.. எலும்புகளை உறுதிப்படுத்தக்கூடிய அளவுக்கு கால்சியம் உள்ளது..

சீதாப்பழத்துடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து சாப்பிட்டு வந்தாலே, கொலஸ்ட்ரால் உடலில் தங்காது.. மூளைக்கும் செல்லும் ரத்த ஓட்டத்தையும் சீராக்கி, ரத்த சோகை பிரச்சனையையும் தீர்க்கிறது. மாரடைப்பு, பக்கவாதம் நோய்களை நெருங்கவிடாமல் தடுக்கிறது. சருமத்துக்கும் கவசம் போல திகழ்கிறது இந்த சீதாப்பழம்.
அபார்ஷன்: இப்பழத்தின் கொட்டைகளில் ஃபேட்டி ஆசிட் அதிகம் இருப்பதால், எரிவாயுவை உற்பத்தி செய்கின்றன. அபார்ஷன்கள் செய்யும் அளவுக்கு, சீதாப்பழ கொட்டைகளுக்கு, வீர்யம் உள்ளதாம்.. அதனால்தான், கருக்கலைப்பு மருந்துகளில் இந்த சீதாபழ விதைகளை பயன்படுத்துகிறார்கள். இந்த சீதாப்பழ கொட்டைகளை விழுதுபோல அரைத்து தலையில் தடவி குளித்து வந்தால், பேன் தொல்லை முழுமையாக நீங்கிவிடும்..
அதேபோல, மீன் பிடிக்கவும் இந்த கொட்டைகளின் பவுடர் பயன்படுத்தப்படுகிறது. காரணம், இந்த கொட்டையில் ஒருவிதமான நச்சு உள்ளதால், மீன்களுக்கு ஒவ்வாததாக உள்ளதுடன், அவை வெளியே தானாகவே வலையில் சிக்கி கொள்ளுமாம். சீதாப்பழக்கொட்டைகளுடன், வேப்பங்கொட்டைகளும் சேர்த்து தயாரிக்கப்படும் பூச்சிக்கொல்லிகள், சக்திவாய்ந்த நச்சு பூச்சிக்கொல்லியாக கருதப்படுகிறது..
இலைகள்: சீதாபழம், சீதா கொட்டைகளை போலவே, சீதாபழத்தின் இலைகளிலும் மருத்துவ குணங்கள் நிரம்பியிருக்கின்றன.. முக்கியமாக சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த இலைகள் மிகச்சிறந்தது என்கிறார்கள்.. தினமும் காலையில் சீதா மரத்தின் இலைகளில், கசாயம் தயாரித்து குடித்து வந்தாலே நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்குமாம்.
அதேபோல, இந்த இலைகளை கழுவி, தண்ணீரில் போட்டு 5 நிமிடம் கொதிக்க விட்டு, அதன் பிறகு வடிகட்டி, தினமும் காலையில் குடித்து வந்தாலும், சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது என்கிறார்கள்.. காரணம், சீத்தாப்பழ இலைகள் உடலில் உள்ள சர்க்கரையை கரைத்து, சீரான அளவில் இதனை வைக்கக்கூடியவை. நார்சத்துக்களை சரியாக செரிமானம் அடைய செய்து, ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.
அதுமட்டுமல்ல, உடலில் காயங்கள், புண்கள், அலர்ஜி தழும்புகள், கொப்புளங்கள் ஏற்பட்டு விட்டால், இந்த இலைகளை அரைத்து புண்கள் மேல் பற்றுபோல போடுவதால், புண்கள் மெல்ல ஆறத்துவங்கும்..
புற்றுநோய்: புற்றுநோய்க்கு சீதாப்பழங்கள் எந்த அளவுக்கு மருந்தாக உதவுகிறதோ, ஆதுபோலவே, சீதாபழங்களின் இலைகளும் மருந்தாக பயன்படுகிறது. காரணம், இதன் இலைகளிலுள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், உடலிலிருக்கும் வெள்ளை ரத்த அணுக்களை அதிகரித்து புற்றுநோய் செல்களுடன் போராடும் சக்தியை தருகிறது.
சுருக்கமாக சொன்னால், சீதாபழத்தின் இலைகள் ஒருவரின் உடலில் புற்றுநோய் செல்கள் உருவாவதை பெரிதும் தடுப்பதாக சொல்லப்படுகிறது. எனவே, மருத்துவர்களின் முறையான ஆலோசனையை பெற்று, இந்த இலைகளை மருந்தாக பயன்படுத்துவது ஆரோக்கியமானது.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications