இளம் ஜோடிகளுக்கு குறையும் பாலியல் ஆசை.. திருமணத்திற்கு பிறகு நடக்கும் மாற்றம்! சரி செய்வது எப்படி! மருத்துவர்கள் அட்வைஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொதுவாகவே திருமணமான ஜோடிகளுக்கு சில காலம் மட்டுமே உடலுறவில் ஆர்வம் இருக்கும். அதன் பிறகு உடலுறவு மீதான ஆர்வம் குறையத் தொடங்கும். இதனால் பலரும் பயந்து கூடப் போவார்கள். ஆனால், இது முழுக்க முழுக்க இயற்கையானது என்கிறார்கள் மருத்துவர்கள்.. ஏன் இதுபோல உடலுறவில் ஆர்வம் குறைகிறது.. இதன் பின்னணியும் காரணமும் என்ன.. இந்த சிக்கலை எப்படித் தீர்க்கலாம் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.!

ஆசை 60 நாள் மோகம் 30 நாள் என ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள். அதற்கேற்ப திருமணமான கொஞ்சக் காலத்திலேயே இளம் தம்பதிகளுக்கும் கூட அவர்களின் பாலியல் வாழ்க்கையில் போர் அடிக்க ஆரம்பித்து இருக்கும். உடலுறவு கொள்வதில் ஆர்வம் இல்லாமல் போய் இருக்கும். உங்களில் பலருக்கும் கூட அதுபோல ஏற்பட்டு இருக்கும்.

Why Men and Women Lose Interest in Intimacy After Marriage Key Reasons Explored

பாலியல் வாழ்க்கையில் குறையும் ஆர்வம்

திடீரென தம்பதிகளுக்கு இடையே குறையும் இந்த நெருக்கத்தால் பலரும் விரக்தியும் குழப்பமும் கூட அடைகிறார்கள். இது ஆண்கள் பெண்கள் என இரு தரப்பையும் பாதிக்கிறது. திருமணத்திற்குப் பிறகு பாலியல் ஆசை குறைய உளவியல் மற்றும் உடல் ரீதியாக பல்வேறு காரணங்கள் உள்ளன. இவை என்ன காரணங்கள் என்பதை நாம் தெரிந்து கொண்டால் அந்த சிக்கலை எளிதாகத் தீர்க்க முடியும்.

காரணங்கள் என்ன?

முதல் காரணம் ஹார்மோன் மாற்றங்கள்.. உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களே உடலுறவில் ஆர்வம் குறையப் பிரதான காரணமாக இருக்கிறது. நாம் வயதாகும்போது, உடல் குறைவான அளவிலேயே பாலியல் ஹார்மோன்களை உற்பத்தி செய்கின்றன. இதனால் பாலியல் ஆசைகள் குறைந்து போகின்றன. பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படும் போது குறிப்பிடத்தக்க ஹார்மோன் மாற்றங்கள் ஏற்பட்டு பாலியல் ஆசை குறையும். அதேபோல ஆண்களுக்கும் கூட டெஸ்டோஸ்டிரோன் அளவுகளில் படிப்படியாகக் குறையும்.

அடுத்து மன அழுத்தம் மற்றும் வாழ்க்கை முறை. இந்த காலத்தில் ஆண் பெண் என இருவருமே வேலைக்குச் செல்கிறார்கள். மேலும், பெரும்பாலானோர் பெற்றோரோடு கூட்டுக் குடும்பமாக இல்லாமல் தனியாகவே வாழ்கிறார்கள்.. அப்போது வொர்க் பிரஷர், பொருளாதார சிக்கல், குழந்தைகள் பராமரிப்பு பொறுப்புகள் கூடுவதால் அவர்கள் தினசரி வாழ்க்கையிலேயே பிரஷர் அதிகரிக்கிறது.

இதுவும் தம்பதியின் பாலியல் வாழ்க்கையைப் பாதிக்கலாம். மன அழுத்தம் மற்றும் சோர்வு ஆகியவை அதிகரிப்பதால் உடலுறவு மீதான ஆர்வம் குறைகிறது. கணவன் மனைவி இடைய இருக்கும் மோதல்கள், மனக்கசப்பு உணர்ச்சி ஆகியவை பாலியல் உறவை மேலும் சிக்கலாக மாற்றுகிறது.

வேலையைப் போலத் தோன்றும்

அதேபோல காதல் திருமணமாக இருந்தாலும் சரி, வீட்டார் ஏற்பாடு செய்யும் திருமணமாக இருந்தாலும் சரி, அதில் ஆர்வம் சில வாரங்கள் மட்டுமே இருக்கும். பிறகு நாம் மெல்ல ஒரு வழக்கமான வாழ்க்கையில் செட்டிலாகிவிடுவோம். பெட் ரூம் நெருக்கம் மீதான ஆர்வம் குறையத் தொடங்கும். இதனால் ஒரு கட்டத்திற்குப் பிறகு உடலுறவு என்பதே தனி வேலை போலத் தெரியும். காலப்போக்கில் தம்பதிக்கு உடலுறவில் ஆர்வம் குறைய இதுவும் ஒரு காரணமாக இருக்கிறது.

என்ன செய்யலாம்!

மேலும், இந்த பிரச்சினையை எப்படித் தீர்க்கலாம் என்பதற்கும் சில டிப்ஸ்களை வழங்குகிறார்கள். முதலில் இருவரும் மனம் விட்டுப் பேசுங்கள். ஒருவர் குறித்து இன்னொருவர் என்ன நினைக்கிறார்கள் என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள். மேலும், வீட்டு வேலை, வொர்க் பிரஷர் உள்ளிட்டவை எப்போதும் இருந்து கொண்டே தான் இருக்கும். இதனால் அதை மைண்டில் இருந்து தூக்கி வீசுங்கள். நீங்கள் தனிமையில் இருக்க நேரத்தை ஒதுக்குங்கள். இவை அடிப்படை போலத் தெரிந்தாலும் பாலியல் வாழ்க்கையில் ஆர்வம் குறையாமல் இருக்க இது முக்கியமாக தேவை.!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+