தாய்மை பொங்க பிகினி உடையில் வந்த மிஸ் குரகாவோ.. அழகிப் போட்டியிலிருந்து நீக்கம்!
மின்ஸ்க், பெலாரஸ்: பெலாரஸில் நடந்த மிஸ் சூப்பர் நேஷனல் அழகிப் போட்டியில் கலந்து கொண்ட குரகாவோ தீவைச் சேர்ந்த அழகி வெசின்டே டெமிலினோஸ், கர்ப்பமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் அவர் அழகிப் போட்டியிலிருந்து விலக நேரிட்டது.
இந்தஅழகிப் போட்டியில் மணிலாவைச் சேர்ந்த மிஸ் முத்யா ததுல் பட்டம் வென்றார்.
இந்தப் பட்டத்தை வென்ற முதல் பிலிப்பைன்ஸ் அழகி இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. பெலாரஸ் நாட்டின் மின்ஸ்க் நகரி்ல இந்த அழகிப் போட்டி நடைபெற்றது.

வயிறு உப்பிய நிலையில்.. பிகினி உடையில்
இந்த அழகிப் போட்டியில் கலந்து கொண்ட மிஸ் குரகாவோ, பிகினி உடைப் போட்டியின்போதுதான் கர்ப்பமாக இருந்தது வெளிச்சத்திற்கு வந்தது. காரணம், அவரது வயிறு உப்பிக் காணப்பட்டது. தாய்மையை மறைக்க முடியாதே...

டெஸ்ட் பாசிட்டிவ்
இதையடுத்து நடுவர்கள் அவருக்கு கர்ப்பமாக இருக்கிறாரா என்பதற்கான சோதனைக்கு உத்தரவிட்டனர். சோதனையில் அவர் கர்ப்பமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆனா மிஸ் குரகாவோவுக்கு ஷாக் இல்லை
இருப்பினும் தான் கர்ப்பமாக இருப்பது ஏற்கனவே மிஸ் குரகாவோவுக்கு தெரிந்திருந்தது. இதனால் அவர் அதிர்ச்சி அடையவில்லை. ஆனால் போட்டியில் தொடர முடியாத நிலை ஏற்பட்டு விட்டதே என்பதுதான் அவருக்கு வருத்தமாக போய் விட்டதாம்.

இருந்து ஊக்குவிக்க அனுமதி
போட்டியிலிருந்து அவர் நீக்கப்பட்டார். இருப்பினும் அவர் போட்டி முழுவதும் கூடவே இருந்து சக போட்டியாளர்களை ஊக்குவிக்க அனுமதி தந்தனர் போட்டி அமைப்பாளர்கள். அவரும் உற்சாகத்துடன் சக போட்டியாளர்களை ஊக்குவித்தார், டிப்ஸ் கொடுத்தார்.

மணிலாவின் முத்யாவுக்கு பட்டம்
இந்தப் போட்டியில் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த அழகி முத்யா ததுல் பட்டம் வென்றார். இப்பட்டம் வென்ற முதல் பிலிப்பைன்ஸ் அழகி இவர்தான்.

சரி, குரகாவோ எங்கிருக்கிறது தெரியுமா...?
கரீபியக் கடலில், நெதர்லாந்துக்கு அருகில் உள்ள குட்டித் தீவுதான் குரகாவோ. இங்கு மொத்தமே ஒன்றரை லட்சம் பேர்தான் வசிக்கிறார்கள். நெதர்லாந்து நாட்டுக்குக் கட்டப்பட்டது இந்தத் தீவு.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications