For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டெல்லி சார்நிலை தேர்வு வாரியத்தில் 7,236 ஆசிரியர், ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள்

Google Oneindia Tamil News

சென்னை: 7,236 ஆசிரியர், ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான அறிவிக்கையை டெல்லி சார்நிலை தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 24 ஆம் தேதியாகும். பயிற்சி பெற்ற பட்டப்படிப்பு ஆசிரியர்கள் (ஹிந்தி) பெண்கள் 551 காலியிடங்களும் பயிற்சி பெற்ற பட்டப்படிப்பு முடித்த ஆசிரியர்கள் (ஹிந்தி) ஆண்கள்- 556 காலியிடங்களும் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் (இயற்கை அறிவியல்) ஆண்கள்- 1040, பயிற்சி பெற்ற பட்டப்படிப்பு முடித்த ஆசிரியர்கள் (இயற்கை அறிவியல்) பெண்கள்- 824, பயிற்சி பெற்ற பட்டப்படிப்பு முடித்த ஆசிரியர்கள் (கணிதம்) பெண்கள்- 1167, பயிற்சி பெற்ற பட்டப்படிப்பு முடித்த ஆசிரியர்கள் (கணிதம்) ஆண்கள்- 988, பயிற்சி பெற்ற பட்டப்படிப்பு முடித்த ஆசிரியர்கள் (சமூக அறிவியல்) ஆண்கள்- 469, பயிற்சி பெற்ற பட்டப்படிப்பு முடித்த ஆசிரியர்கள் (சமூக அறிவியல்) பெண்கள்- 662, பயிற்சி பெற்ற பட்டப்படிப்பு முடித்த ஆசிரியர்கள் (வங்காளம்) ஆண்- 1 ஆகிய பணிகளுக்கு இத்தனை காலியிடங்கள் உள்ளன.

7,236 vacancies are for teachers and non teaching staffs in Delhi

இவர்களுக்கான ஊதியம் ரூ 9300- 34800+ தர ஊதியம் ரூ 4200. வயது வரம்பு 32-க்குள் இருக்க வேண்டும். அது போல் உதவி ஆசிரியர் (பிரைமரி)- 434, உதவி ஆசிரியர் (நர்சரி)- 74, ஊதியம் மாதம் ரூ 9300- 34800+தர ஊதியம் ரூ 4200. ஜூனியர் செக்ரடேரியட் அசிஸ்டென்ட் (எல்டிசி)- 278 பணிக்கு மாத ஊதியமாக ரூ 5200- 20200 + தர ஊதியம் ரூ 4200, வயது வரம்பு 27 க்குள் இருக்க வேண்டும்.

கவுன்சலர்- 50 இடங்கள், மாதம் ரூ 9300- 34800+தர ஊதியம் ரூ 4200, தலைமை கிளார்க்- 12 பணியிடங்கள், மாத ஊதியமாக ரூ 9300- 34800+தர ஊதியம் ரூ 4600 ஆகும். தேர்வு செய்யப்படும் முறை ஒன்று, இரண்டு கட்ட எழுத்துத் தேர்வு, மற்றும் திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை https://dsssb.delhi.gov.in/sites/default/files/All-PDF/Advertisement%20No.%2002-2021_compressed.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

English summary
7000 and more vacancies in Delhi Service Commission.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X