அனுபவம் வேண்டாம்.. டிகிரி மட்டும் போதும்.. Accenture ஐடி நிறுவனம் தரும் அசத்தலான வாய்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னணி ஐடி நிறுவனமான அக்சென்ச்சரில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. டிகிரி முடித்து பணி அனுபவம் இல்லாதவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம். தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

it jobs job jobs

பிரபல ஐடி நிறுவனங்களில் ஒன்று அக்சென்ச்சர் (Accenture). இந்த நிறுவனத்தில் இருந்து அவ்வப்போது வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது வெளியிடப்பட்ட அறிவிப்பின் முக்கிய விவரங்கள் வருமாறு:

அக்சென்ச்சர் ஐடி நிறுவனத்தில் தற்போது அப்ளிகேஷன் டெவலப்பர் (Application Developer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த பணிக்கு பிளஸ் 2 முடித்து ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். அனைத்து படிப்புகளையம் பள்ளி, கல்லூரி சென்று படித்திருக்க வேண்டும். அதோடு அப்ளிகேஷன் டெவலப்பர் பிரிவில் 2 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பம் செய்யலாம். Epic Systems-ல் பணியாற்றிய அனுபவம் மற்றும் Agile டெவலப்மென்ட் மெத்தடாலஜிஸில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

அதேபோல் டிகிரி முடித்து பணி அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பம் செய்யலாம். பணி அனுபவம் இல்லாதவர்கள் என்றால் அவர்களிடம் EPIC Systems ஸ்கில்ஸ் கண்டிப்பாக இருக்க வேண்டும். சாப்ட்வேர் டெவலப்மென்ட் கொள்கைகள் மற்றும் மெத்தடாலஜிஸ் பற்றிய நல்ல புரிதல் என்பது இருக்க வேண்டும். அதேபோல் ஜாவா அல்லது சி++ தெரிந்திருக்க வேண்டும். டேட்டாபேஸ் மேனேஜ்மென்ட் சிஸ்டம்ஸ் பற்றிய புரிதல் இருக்க வேண்டும்.

தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்த விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். அதேபோல் பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் உள்ள அக்சென்ச்சர் நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை. இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது. ஏனென்றால் தேவையான அளவுக்கு விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பம் கிடைத்துவிட்டால் விண்ணப்ப பதிவு என்பது முடிவுக்கு வரலாம். எனவே உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+