அனுபவம் வேண்டாம்.. டிகிரி இருந்தாலே போதும்.. Accenture-ல் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பிரபல ஐடி நிறுவனங்களில் ஒன்றான அக்சென்ச்சரில் இருந்து காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு டிகிரி முடித்து பணி அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் பெங்களூரில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

நம் நாட்டில் செயல்பட்டு வரும் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக Accenture உள்ளது. இந்த நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போதைய அறிவிப்பின் விவரம் வருமாறு:

it jobs jobs

அக்சென்ச்சர் நிறுவனத்தில் தற்போது அப்ளிகேஷன் சப்போர்ட் இன்ஜினியர் (Application Support Engineer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். அதேபோல் குறிப்பிட்ட பிரிவில் 0- 2 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

எனவே பணி அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பம் செய்யலாம். இருப்பினும் அவர்களுக்கு சில முக்கிய ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். அதன்படி விண்ணப்பம் செய்வோருக்கு Fuctional Test Planning ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். மேலும் சாப்ட்வேர் டெஸ்ட்டிங் மெத்தடாலஜிஸ், டெஸ்ட் கேஸ் டிசைன் மற்றும் எக்ஸிக்கியூஷன் உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். டெஸ்ட் ஆட்டோமேஷன் டூல்ஸில் அனுபவம் கொண்டிருந்தால் அது பிளஸ் பாயிண்ட்டாகும்.

மேலும் இந்த பணிக்கு ஆங்கிலத்திலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். பிரச்சனைகளை தீர்க்கும் திறன் இருக்க வேண்டும்.
பணிக்கு தேர்வாகும் நபர்கள் சாப்ட்வேர் டிடெக்டிவ், டைனமிக் சர்வீஸ் ஐடென்டிபிகேஷன் மற்றும் பிரச்சனைகளை தீர்ப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் பெங்களூரில் உள்ள அக்சென்சர் நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த பணிக்கு உடனடியாக விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பதால் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+