Accenture-ல் அசத்தலான வேலை.. அனுபவம் இல்லாமலே ரூ.4.60 லட்சம் வரை சம்பளம்.. சென்னையிலும் வாய்ப்பு
சென்னை: Accenture ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை, கோவை, பெங்களூர், ஹைதராபாத் உள்பட 12 பல்வேறு இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர். ஆண்டு சம்பளமாக ரூ.4.60 லட்சம் வரை வழங்கப்பட உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக அக்சென்ச்சர் (Accenture) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து தற்போது பேக்கேஜ்ட் அப் டெவலப்மென்ட் அசோசியேட் (Packaged App Development Associate) பிரிவில் அசோசியேட் சாப்ட்வேர் என்ஜினியர் (Associate Software Engineer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் பிஇ, பிடெக், எம்இ, எம்டெக், எம்சிஏ, எம்எஸ்சி உள்ளிட்ட பிரிவுகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது இன்பர்மேஷன் டெக்னாலஜி படிப்பை 2024ம் ஆண்டுக்குள் முடித்திருக்க வேண்டும். 2024ம் ஆண்டுக்கு முன்பு எந்த வருடத்தில் படிப்பை முடித்தவராக இருந்தாலும் விண்ணப்பம் செய்யலாம்.
விண்ணப்பம் செய்வோருக்கு அரியர்ஸ் இருக்க கூடாது. அதேபோல் குறிப்பிட்ட பிரிவில் 0 முதல் 23 மாதங்களுக்கு மேல் பணி செய்திருக்கும் அனுபவம் இருக்க கூடாது. இதனால் பணி அனுபவம் இல்லாமல் இருந்தாலும் கூட சில முக்கிய தகுதிகள் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
அதன்படி HANA, DS, AMDP-யில் ஏபிஏபி டெவலப்மென்ட்டை (ABAP Develoment) நன்கு புரிந்து வைத்திருக்க வேண்டும். Salesforce.com-ன் அனலிசிஸ் மற்றுமம் கஸ்டமைசேஷனில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். J2EE மற்றும் Full Stack Development-ல் பணியாற்றிய அனுபவம் கொண்டிருக்க வேண்டும். மேலும் .NET(ASP.NET/ASP.NET MVC) தெரிந்து வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் பணியாற்றிய அனுபவம் கொண்டிருக்க வேண்டும். அதுமட்டுமின்றி விண்ணப்பத்தாரர்கள் பிரச்சனையை தீர்க்கும் திறன், நல்ல கம்யூனிகேசன் திறமை கொண்டிருக்க வேண்டும்.
குறிப்பாக இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் அக்சென்ச்சரில் கடந்த 3 மாதத்தில் நடந்த இண்டர்வியூவில் பங்கேற்றவராக இருக்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஆண்டு சம்பளமாக ரூ. 4.60 ஆயிரம் வரை வழங்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. தற்போது பெங்களூர், ஹைதராபாத், புனே, மும்பை குர்கிராம்,கொல்கத்தா, இந்தூர், ஜெய்ப்பூர், அகமதாபாத், புவனேஸ்வர் உள்ளிட்ட இடங்களிலும், தமிழகத்தில் சென்னை, கோவையில் காலியிடங்கள் உள்ளது. இதில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் நியமனம் செய்யப்படலாம்.
எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அக்சென்ச்சர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாள் பற்றியும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் இந்த பணியை விரும்புவோர் முடிந்தவரை விரைவாக விண்ணப்பம் செய்யலாம்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications