அனுபவம் வேண்டாம்.. Accenture ஐடி நிறுவனம் தரும் சூப்பர் வாய்ப்பு.. சென்னையிலும் பணியாற்ற சான்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: Accenture ஐடி நிறுவனத்தில் இருந்து முக்கிய வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை, கோவை, பெங்களூர், ஹைதராபாத் உள்பட 12 பல்வேறு இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக அக்சென்ச்சர் (Accenture) செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் தற்போது Packaged App Development Associate பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

it jobs jobs job

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் பிஇ, பிடெக், எம்இ, எம்டெக், எம்சிஏ, எம்எஸ்சி உள்ளிட்ட பிரிவுகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னலாஜி, கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், டேட்டா சயின்ஸ் கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் அப்ளிகேஷன்ஸ் உள்ளிட்ட படிப்புகளை 2024ம் ஆண்டில் முடித்திருக்க வேண்டும். விண்ணப்பம் செய்வோருக்கு அரியர்ஸ் இருக்க கூடாது.

அதேபோல் குறிப்பிட்ட பிரிவில் 0 முதல் 11 மாதங்களுக்கு மேல் பணி செய்திருக்கும் அனுபவம் இருக்க கூடாது. இதனால் பணி அனுபவம் இல்லாமல் இருந்தாலும் கூட விண்ணப்பம் செய்யலாம். இருப்பினும் அவர்களுக்கு என்று சில முக்கிய தகுதிகள் இருக்க வேண்டும். அதன்படி HANA, CDS, AMDP, பெர்பாமன்ஸ் அனலிசிஸ் உள்ளிட்டவற்றின் அடிப்படையை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

அதேபோல் Salesforce.com-ன் அனலிசிஸ் மற்றும் கஸ்டமைசேஷனில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். J2EE மற்றும் Full Stack Development-ல் பணியாற்றிய அனுபவம் கொண்டிருக்க வேண்டும். மேலும் .NET(ASP.NET/ASP.NET MVC) தெரிந்து வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால்பணியாற்றிய அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி விண்ணப்பத்தாரர்கள் பிரச்சனையை தீர்க்கும் திறன், நல்ல கம்யூனிகேசன் திறமை கொண்டிருக்க வேண்டும். குறிப்பாக இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் அக்சென்ச்சரில் கடந்த 3 மாதத்தில் நடந்த இண்டர்வியூவில் பங்கேற்றவராக இருக்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பெங்களூர், ஹைதராபாத், புனே, மும்பை குர்கிராம்,கொல்கத்தா, இந்தூர், ஜெய்ப்பூர், அகமதாபா்த், புவனேஸ்வர் உள்ளிட்ட இடங்களிலும், தமிழகத்தில் சென்னை, கோவையில் காலியிடங்கள் உள்ளது. இதில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் நியமனம் செய்யப்படலாம்.எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அக்சென்ச்சர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாள் பற்றியும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் இந்த பணியை விரும்புவோர் முடிந்தவரை விரைவாக விண்ணப்பம் செய்யலாம்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+