சென்னை - பெங்களூர் - ஹைதராபாத்தில் காலியிடங்கள்.. அமேசான் ஐடி நிறுவனத்தில் வேலை ரெடி
சென்னை: அமேசானின் ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை, பெங்களூர், ஹைதராபாத், மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு அமேசான் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் சார்பில் ஆன்லைன் வர்த்தகம், கிளவுட் கம்ப்யூட்டிங், ஆன்லைன் விளம்பரம், டிஜிட்டல் ஸ்ட்ரீம்மிங், ஏஐ உள்ளிட்ட பல்வேறு துறை சர்வீஸ்கள் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகம் மட்டுமின்றி நம் நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் அமேசான் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் தற்போது அமேசான் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
தற்போதைய அறிவிப்பின்படி அமேசான் நிறுவனத்தில் சாப்ட்வேர் டெவ் இன்ஜினியர் I (Software Dev Engineer I) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் அல்லது அதற்கு தொடர்புடைய துறையில் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
அதேபோல், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஃபண்டமென்டல்ஸ் தெரிந்திருக்க வேண்டும். அதாவது ஆப்ஜெக்ட் ஓரியன்டட் டிசைன், அல்காரிதம் டிசைன், டேட்டா ஸ்ட்ரெக்ச்சர்ஸ், பிரச்சனைகளை தீர்க்கும் இருக்க இருப்பதோடு, காம்ளக்ஸிட்டி அனலிசிஸ் தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் புரோகிராமிங் லேங்குவேஜ்களான சி/சி++, பைத்தான், ஜாவா அல்லது Perl தெரிந்திருக்க வேண்டும். ஆங்கிலத்தில் பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். இது அடிப்படை தகுதியாக உள்ளன.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தகுதி மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்படும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் மொத்தம் 5 இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர். அதன்படி ஹைதராபாத், சென்னை, பெங்களூர், டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அமேசான் நிறுவனத்தின் இணையதளம் சென்று விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி குறிப்பிடப்படவில்லை. இதனால் முன்கூட்டியே விண்ணப்பம் செய்வது நல்லது. ஏனென்றால் எப்போது வேண்டுமானாலும் இந்த பணிக்கான விண்ணப்ப பதிவு முடிவுக்கு வரலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
IT Jobs: பெங்களூர் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. ஜூன் 15ல் ஆன்லைனில் இண்டர்வியூ -
மத்திய அரசு நிறுவனத்தில் வேலை.. 12ம் வகுப்பு தகுதிதான்.. ஆரம்பமே 21,500 சம்பளம்.. மதுரையில் பணியிடம் -
IT Jobs: HCL-யில் காலியிடங்கள்.. ஜூன் 20ம் தேதி சென்னை, பெங்களூர் உள்பட 3 இடங்களில் இண்டர்வியூ -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம்












Click it and Unblock the Notifications