For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அறிவுக்குத்தான் முக்கியத்துவம்..அக்னிபாத் ஆட்சேர்ப்பு நடைமுறையில் மாற்றம்! ராணுவம் முக்கிய அறிவிப்பு

இந்த ஆண்டு ராணுவத்திற்கு ரூ.5.93 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அக்னிபாத் திட்டத்திற்கு மட்டும் சுமார் ரூ.4,266 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: ஆட்கள் சேர்க்கும் முறையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த மாற்றமானது நடப்பாண்டு (2023-2024) முதல் அமல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய ராணுவ பலத்தை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னிலையில் இருக்கிறது. இந்திய ராணுவத்தில் சுமார் 12 லட்சத்திற்கும் அதிகமானோர் பணியாற்றுகின்றனர். இந்நிலையில் கடந்த ஆண்டு முதல் அக்னிபாத் திட்டத்தின் கீழ் ஆட்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். அதேபோல இந்த ஆண்டும் சுமார் 40 ஆயிரம் வீரர்களை புதியதாக சேர்க்க ராணுவம் முடிவெடுத்துள்ளது. அதன்படி வரும் ஏப்ரல் மாதம் இதற்கான தேர்வு நடத்தப்பட இருக்கிறது.

வழக்கமாக தேர்வுகள் மூன்று கட்டங்களாக நடத்தப்படும். அதாவது முதல் கட்டமாக உடல் தகுதி தேர்வும், இதனையடுத்து மருத்துவ பரிசோதனையும், மூன்றாவதாக ஆன்லைன் வாயிலாக நுழைவுத் தேர்வு (CEE) நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு முதல் இந்த நடைமுறைகள் மாற்றப்படுவதாக ராணுவம் அறிவித்துள்ளது. இந்த புதிய அறிவிப்பின்படி முதலில் ஆன்லைன் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும்.

அறிவிப்பு

அறிவிப்பு


இது குறித்து ராணுவம் கூறுகையில், "அறிவாற்றல் அம்சத்தில் அதிக கவனம் செலுத்துவதை உறுதி செய்யவே இந்த மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது" என்று கூறியிருக்கிறது. அதேபோல இது குறித்த முழுமையான விவரங்கள் இம்மாதம் நடுப்பகுதியில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பாண்டில் நாடு முழுவதும் சுமார் 40 ஆயிரம் பேரை ராணுவத்தில் இணைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு ஆன்லைன் வழி நுழைவுத்தேர்வு 200 இடங்களில் உள்ள தேர்வு மையங்களில் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்புகள் இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படும்.

மாற்றம்

மாற்றம்

இதில் விண்ணப்பிப்பவர்கள் முதலில் ஆன்லைன் நுழைவுத்தேர்வை எழுத வேண்டும். அதில் தேர்ச்சிப்பெறும் நபர்கள் மட்டுமே உடல் தகுதி தேர்வில் பங்கேற்க முடியும். இதிலும் தேர்ச்சிபெற்றால்தான் மருத்துவப்பரிசோதனை நடைபெறும். இதற்கு முன்னர் முதலில் உடல் தகுதி தேர்வு நடத்தப்பட்டதால் ஏராளமான இளைஞர்கள் குவிந்தனர். இதனால் கூடுதல் நேரம் செலவானது. சில நேரங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் ராணுவத்தினரே திணறினர். இதுபோன்ற சிரமங்களை குறைக்கவே முதலில் ஆன்லைன் நுழைவு தேர்வு நடத்தப்படுவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மோதல்

மோதல்

ஏற்கெனவே சீனாவுக்கும் நமக்குமான மோதல் போக்கு தொடர்ந்து கூர்மையடைந்து வருகிறது. எனவே இந்நிலையில் நாட்டின் வடகிழக்கு எல்லையிலும், அதேபோல காஷ்மீர் பகுதியிலும் கூடுதல் கண்காணிப்பு அவசியமாகியுள்ளது. ஆனால் அதே நேரத்தில் ராணுவத்தில் வழங்கப்படும் ஆடர்களை சரியாக புரிந்துகொள்ள கல்வியறிவும் அவசியமாகிறது. இதற்காகவே முதலில் ஆன்லைன் தேர்வு நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. புதியதாக தேர்வு செய்யப்படும் வீரர்கள், 'அக்னி வீரர்கள்' என்று அழைக்கப்படுவார்கள். இவர்கள் நான்கு ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றலாம். அதற்கு முன்னர் சுமார் 6 மாதம் இவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.

நிதி

நிதி

ஏற்கெனவே சீனாவுக்கும் நமக்குமான மோதல் போக்கு தொடர்ந்து கூர்மையடைந்து வருகிறது. எனவே இந்நிலையில் நாட்டின் வடகிழக்கு எல்லையிலும், அதேபோல காஷ்மீர் பகுதியிலும் கூடுதல் கண்காணிப்பு அவசியமாகியுள்ளது. ஆனால் அதே நேரத்தில் ராணுவத்தில் வழங்கப்படும் ஆடர்களை சரியாக புரிந்துகொள்ள கல்வியறிவும் அவசியமாகிறது. இதற்காகவே முதலில் ஆன்லை தேர்வு நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. புதியதாக தேர்வு செய்யப்படும் வீரர்கள், 'அக்னி வீரர்கள்' என்று அழைக்கப்படுவார்கள். இவர்கள் நான்கு ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றலாம். அதற்கு முன்னர் சுமார் 6 மாதம் இவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.

நிதி

நிதி

இந்த நான்கு ஆண்டுகள் சேவை முடிந்த பின்னர் இவர்களில் 25% பேர் மட்டும் நிரந்தரமாக பணியமர்த்தப்பட்டு, மீதமுள்ள 75% பேர் வெளியேற்றப்படுவார்கள். இவர்களுக்கு முதலாம் ஆண்டில் ரூ.30 ஆயிரமும், 4வது ஆண்டில் ரூ.40 ஆயிரமும் ஊதியமாக வழங்கப்படும். இந்த ஊதியத்தில் 30% பிடித்தம் செய்யப்பட்டு அவர்கள் 4 ஆண்டுகள் முடித்து சேவையிலிருந்து வெளியேறும்போது ரூ.11.7 லட்சம் வழங்கப்படும். இந்த ஆண்டு அக்னிபாத் திட்டத்திற்கு ரூ.4,266 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The Indian Army has announced that there has been a change in the recruitment process. It has also been announced that this change will be implemented from the current year (2023-2024).
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X