Work From Home.. அனுபவம் வேண்டாம் + ரூ.65,000 வரை சம்பளம்.. ஐடி நிறுவனத்தில் 5 பிரிவில் வேலைவாய்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பேக் எண்ட் டெவலப்பர், பிரண்ட் எண்ட் டெவலப்பர் உள்பட மொத்தம் 5 பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஐடி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பம் செய்யலாம். தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.65 ஆயிரம் வரை சம்பளத்துடன் வீட்டில் இருந்தே வேலை செய்ய வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.

ஐடி நிறுவனங்களில் பணியாற்றுவது தற்போது பலருக்கும் கனவாக உள்ளது. அதுவும் கொரோனா சமயத்தில் பல நிறுவனங்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற வாய்ப்பு வழங்கின. இப்போது மீண்டும் ஊழியர்களை அலுவலகத்தில் வைத்து வேலை வாங்கி வருகின்றன.

it jobs jobs job

இப்படியான சூழலில் சில நிறுவனங்கள் மட்டுமே வீட்டில் இருந்து பணியாற்றும் வகையிலான Work From Home வேலைவாய்ப்புகளை வழங்கி வருகின்றன. அந்த வகையில் Brewappsn என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் முழுவிவரங்கள் வருமாறு:

HCL வேலைவாய்ப்பு.. பிப்ரவரி 22ம் தேதி இண்டர்வியூ.. சென்னை அம்பத்தூரில் பணி நியமனம்
Brewappsn நிறுவனத்தில் தற்போது 5 பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதன்படி UI/UX Design, Backend developer, Frontend Developer, QA, Data Analyst உள்ளிட்ட 5 பிரிவுகளில் பணியாற்ற ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு மேற்கூறிய பிரிவுகளில் நன்கு பணியாற்ற தெரிந்திருக்க வேண்டும்.

குறைந்தபட்சம் 0 - 3 ஆண்டு பணி அனுபவம் கொண்டவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம். அதன்படி மேற்கூறிய ஸ்கில்செட் இருந்தும் பணி அனுபவம் இல்லாமல் இருப்பவர்களும் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்டர்நேஷனல் புராஜெக்ட்டுகளை எடுத்து பணி செய்ய வேண்டியிருக்கும். Flexible Work hours வழங்கப்படும்.

இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.30 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.65 ஆயிரம் வரை சம்பளம் என்பது வழங்கப்படும். இந்த சம்பளம் என்பது பணி அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து மாறுபடும். சம்பளம் குறித்த விபரம் கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். இது ஒரு Remote வகை பணியாகும். இதனால் பணிக்கு தேர்வாகும் நபர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்யலாம்.

இந்த பணிக்கான அறிவிப்பு என்பது நேற்று வெளியாகி உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் Brewappsn நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து உடனடியாக ஆன்லைனில் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதனால் தேவையான ஆட்கள் விண்ணப்பம் செய்தவுடன் அதற்கான லிங்க் காலாவதியாகிவிடும். எனவே இந்த பணியை விரும்புவோர் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+