சம்பளம் ரூ.63 ஆயிரம்! 10 முடித்திருந்தால் மத்திய அரசு பணி! பிஆர்ஓவில் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு!
டெல்லி: மத்திய பாதுகாப்பு துறையின் கட்டுப்பாட்டில் உள்ள எல்லை சாலை கழகத்தில் மொத்தம் 876 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 2 பிரிவாக நிரப்பப்பட உள்ள இந்த பணிகளுக்கு மாத சம்பளமாக அதிகபட்சம் ரூ.63 ஆயிரம் வரை கிடைக்கும். வேலைக்கு விண்ணப்பிக்க 10ம் வகுப்பு முடித்திருந்தால் போதும்.
மத்திய பாதுகாப்புத்துறையின் கீழ் Border Road Organization(BRO)எனும் எல்லை சாலை கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த கழகத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இந்த காலியிடங்களுக்கான முறையான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் உள்ள முக்கிய விபரங்கள் வருமாறு:

காலியிடங்கள் எவ்வளவு?
எல்லை சாலை கழகத்தில் மொத்தம் 876 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இது 2 பிரிவாக நிரப்பப்பட உள்ளது. அதன்படி ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் பிரிவில் 377, மல்டி ஸ்கில்ட் வொர்க்கர் (டிரைவர் இன்ஜின் ஸ்டேட்டிக்) பிரிவில் 499 இடங்களுக்கு விண்ணப்பங்கள் செய்ய முடியும்.

கல்வி தகுதி- வயது வரம்பு என்ன?
இந்த பொறுப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பிளஸ் 2 மற்றும் தொடர்புடைய பிரிவில் சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும். ஸ்டோர் கீப்பர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 18 முதல் 27 வயதுக்குள்ளும், ஸ்கில்ட் வொர்க்கர் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பத்தாரர்களின் வயது 11.7.2022 அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும். அரசு விதிகளின்படி வயது வரம்பில் சலுகைகள் உள்ளன. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயதும், ஓபிசி பிரிவினருக்கு 3 வயதும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வயது வரையும் சலுகைகள் உண்டு.

சம்பளம் எவ்வளவு?
ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் பிரிவினருக்கு குறைந்தபட்சம் ரூ.19,900 முதல் அதிகபட்சமாக ரூ.63,200 வரை கிடைக்கும். அதேநேரத்தில் மல்டி ஸ்கில்ட் வொர்க்கர் பிரிவில் பணியில் சேருவோருக்கு குறைந்தபட்சம் ரூ.18 ஆயிரமும், அதிகபட்சம் ரூ.56,900ம் மாத சம்பளமாக கிடைக்கும்.

விண்ணப்பிப்பது எப்படி?
விண்ணப்பத்தாரர்கள் எழுத்து மற்றும் உடல் தகுதி தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஜூலை மாதம் 11ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை www.bro.gov.in இணையதளத்தில் பதிவிறக்கி பூர்த்தி செய்து Commandant GREF Centre, Dighi camp, Pune - 411 015 என்ற முகவரிக்கு தபாலில் ஜூலை 11ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.50 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் கிடையாது. கூடுதல் விபரங்களை www.bro.gov.in இணையதளம் மூலம் பார்த்து கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications