சென்னை + பெங்களூரில் IT வேலை.. Cognizant தரும் சூப்பர் சான்ஸ்.. மிஸ் பண்ணாதீங்க.. ரெடியா?
சென்னை: முன்னணி ஐடி நிறுவனமான காக்னிசண்ட்டில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவி்பு வெளியாகி உள்ளது. இதற்கான இண்டர்வியூ ஆன்லைனில் நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை, பெங்களூரில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
தற்போது ஐடி நிறுவனங்களில் பணியாளர்கள் நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். இருப்பினும் கூட ஆங்காங்கே ஐடி நிறுவனங்களில் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தான் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக உள்ள காக்னிசண்ட்டில் (Cognizant) தற்போது காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

அதன்படி காக்னிசண்ட் ஐடி நிறுவனத்தில் தற்போது பிக் டேட்டா இன்ஜினியர் (Big Data Engineer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் பிக் டேட்டா இன்ஜினியர் பிரிவில் பிரைமரி ஸ்கில்ஸாக Pyspark, Azure Synapse, ADF, Bigdata, SQL உள்ளிட்டவை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
அதேபோல் மேற்கூறிய பிரிவில் குறைந்தபட்சம் 6 ஆண்டு முதல் அதிகபட்சமாக 12 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். நோட்டீஸ் பிரியட்டாக 30 முதல் 60 நாட்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை மற்றும் பெங்களூரில் உள்ள காக்னிசண்ட் அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் குறித்த விவரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது. மேலும் பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. எனவே எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம்.
எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் காக்னிசண்ட் இணையதளம் சென்று அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்வோருக்கு இண்டர்வியூ குறித்த விவரங்கள் அனுப்பி வைக்கப்படும். இண்டர்வியூ என்பது வீடியோ கால் முறையில் இருக்கும். இதனால் இருந்த இடத்திலேயே இருந்து இண்டர்வூயூவில் பங்கேற்கலாம். .
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ண்பபம் செய்ய Click Here
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications