சுங்கத்துறை அலுவலகத்தில் வேலை.. 92 ஆயிரம் வரை சம்பளம்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்
சென்னை: மத்திய வருவாய் மற்றும் நிதி அமைச்சகத்தின் கீழ் கஸ்டம் அலுவலத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. சீனியர் ஸ்டோர் கீப்பர், டிரேட்ஸ்மேன் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. பத்தாம் வகுப்பு கல்வித் தகுதியுடன் பணி சார்ந்த அனுபவம் வாய்ந்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணபிக்க முடியும். சம்பளத்தை பொறுத்தவரை மாதம் 18 ஆயிரம் முதல் 92 ஆயிரம் வரை வழங்கப்படும்.
சுங்க வரி விதிப்பு மீறல்கள் உள்ளிட்டவற்றை கண்காணிக்கும் அமைப்பாக உள்ள கஸ்டம்ஸ் அலுவலகங்கள் மத்திய வருவாய் மற்றும் நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்றன. முக்கிய விமான நிலையங்கள், துறைமுகங்களில் சுங்கவரி கண்காணிப்பு பணியில் ஈடுபடுவது கஸ்டம்ஸ் அலுவலர்களின் முக்கியமான பணியாகும்.

கஸ்டம் அலுவலகத்தில் வேலை
நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் இதன் அலுவலகங்கள் உள்ளன. இந்த நிலையில், கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கஸ்டம்ஸ் அலுவலகத்தில் காலியாக உள்ள 19 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
* டிரேட்ஸ்மேன் - 03
* Seaman - 11
* கிரீசர் - 04
* சீனியர் ஸ்டோர் கீப்பர் - 01
கல்வி தகுதி:
டிரேட்ஸ்மேன் பணிக்கு மெக்கானிக் / டீசல்/ஃபிட்டர் / டர்னர் / வெல்டர் / எலக்ட்ரிசீயன் / இன்ஸ்ட்ரூமெண்டல்/ கார்பென்ட்ரி உள்ளிட்ட பிரிவுகளில் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பொறியியல் /ஆட்டோமொபைல் / கப்பல் பழுதுபார்க்கும் நிறுவனத்தில் 2 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Seaman பணிக்கு10 ஆம் வகுப்பு கல்வி தகுதியுடன் இயந்திரமயமாக்கப்பட்ட கப்பலில் மூன்று வருட அனுபவம் மற்றும் ஹெல்ம்ஸ்மேன் மற்றும் சீமேன்ஷிப் பணியில் இரண்டு ஆண்டுகள் அனுபவம் பெற்று இருக்க வேண்டும். கல்வி தகுதி குறித்த விவரங்களை தேர்வர்கள் தேர்வு அறிவிப்பில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
வயது வரம்பு:
15.12.2025- தேதிப்படி 25 வயதுக்கு மிகாதவர்கள் விண்ணப்பிக்கலாம். சீனியர் ஸ்டோர் கீப்பர் பணிக்கு 30 வயதுக்கு மிகாதவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் சலுகை உண்டு. எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.
சம்பளம்:
* டிரேட்ஸ்மேன் - ரூ.19,900 - 63,200/-
* Seaman - ரூ..18,000 - 56,900/-
* Greaser - ரூ.18,000 - 56,900/-
* சீனியர் ஸ்டோர் கீப்பர் - ரூ.29,200 - 92,300/-
தேர்வு முறை:
எழுத்து தேர்வு மற்றும் திறன் தேர்வு, சான்றிதழ் சரிபாப்பு அடிப்படயில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பங்களை தபால் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
The Additional Commissioner of Customs (Establishment),
OFFICE OF THE COMMISSIONER OF CUSTOMS (PREVENTIVE),
5TH FLOOR, CATHOLIC CENTRE, BROADWAY,
COCHIN - 682031
EMAIL ID - [email protected] .
விண்ணப்பிக்க வரும் 15.12.2025 கடைசி நாளாகும். தேர்வர்கள் விண்ணப்பிக்கும் முன்பாக தேர்வு அறிவிப்பினை ஒருமுறை படித்து உறுதி செய்து கொள்ளவும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://cenexcisekochi.gov.in/












Click it and Unblock the Notifications