Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நோ எக்ஸாம்! கைநிறைய சம்பளம்.. இசிஐஎல் நிறுவனத்தில் சூப்பர் வேலை.. சென்னை, தூத்துக்குடியில் பணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசின் இசிஐஎல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. எக்ஸாம் இன்றி நேர்க்காணல் முறையில் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்க்காணல் சென்னையில் செப்டம்பர் 1ம் தேதி நடைபெற உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.24 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.55 ஆயிரம் வரை மாதசம்பளமாக வழங்கப்பட உள்ளது.

மத்திய அரசின் அணு ஆய்வு துறையின் கட்டுப்பாட்டில் இசிஐஎல் எனும் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் எனும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

 ECIL recruitment 2023 for various post including project Engineer

இந்த நிறுவனத்தில் 3 பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு: இசிஐஎல் நிறுவனத்தில் ப்ராஜெக்ட் என்ஜினியர், டெக்னிக்கல் ஆபிசர் மற்றும் உதவி ப்ராஜெக்ட் என்ஜினியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

வயது வரம்பு: ப்ராஜெக்ட் என்ஜினியர் பணிக்கு 33 வயதுக்குள்ளும், டெக்னிக்கல் ஆபிசர் பணிக்கு 30 வயதுக்குள்ளும், உதவி ப்ராஜெக்ட் என்ஜினியர் பணக்கு 25 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரையும், ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வயது வரையும் தளர்வு வழங்கப்பட உள்ளது.

கல்வி தகுதி: பணிக்கு விண்ணப்பம் செய்வோர் பிஇ, பிடெக் பிரிவில் எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் என்ஜினியர், எலக்ட்ரானிக்ஸ் டெலிகம்யூனிகேசன் என்ஜினியர், எலக்ட்ரிக்கல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினியர், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாதசம்பளம்: ப்ராஜெக்ட் என்ஜினியர் பணிக்கு முதல் ஆண்டு ரூ.45 ஆயிரம், 2ம் ஆண்டு ரூ.50 ஆயிரம், 3 மற்றும் 4ம் ஆண்டு ரூ.55 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும், டெக்னிக்கல் ஆபிசர் பணிக்கு முதல் ஆண்டு ரூ.25 ஆயிரம், 2ம் ஆண்டு ரூ.28 ஆயிரம், 3, 4ம் ஆண்டு ரூ.31 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். உதவி ப்ராஜெக்ட் என்ஜினியர் பணிக்கு முதல் ஆண்டு ரூ.24,500, 2ம் ஆண்டு ரூ.26,950, 3 மற்றும் 4ம் ஆண்டு ரூ.30 ஆயிரம் மாதசம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.ecil.co.in இணையதளம் மூலம் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்து பூர்த்தியிட்டு உரிய சான்றிதழ்களுடன் நேர்க்காணலில் பங்கேற்க வேண்டும். விண்ணப்பம் செய்வோர் நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். பணிக்கு தேர்வாகும் நபர்கள் இந்தியா முழுவதும் பணியமர்த்தப்பட உள்ளனர். சென்னை, தூத்துக்குடி, கூடன்குளம் உள்ளிட்ட பகுதிகளில் பணியமர்த்தப்படுவார்கள்.

சென்னை நேர்க்காணல்: இது ஒரு தற்காலிக பணியாகும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் முதலில் ஓராண்டு என்ற அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள். அதன்பிறகு அதிகபட்சமாக 4 ஆண்டு வரை பணி நீட்டிப்பு செய்யவும் வாய்ப்புள்ளது. நேர்க்காணல் என்பது 2 நாட்கள் நடைபெற உள்ளது. அதன்படி செப்டம்பர் மாதம் 1ம் தேதி சென்னையில்(தெற்கு மண்டலம்) ECIL, Economist House, Post-Box No.3148, S-15, Industrial Estate, Guindy, chennai 600 032 என்ற முகவரியில் நடைபெற உள்ளது.

அதன்பிறகு செப்டம்பர் 4ம் தேதி மொத்தம் 6 இடங்களில் நேர்க்காணல் நடைபெற உள்ளது. மும்பை (மேற்கு மண்டலம்) அலுவலகம் என்றால் ECIL, 1207, Veer Savarkar Marg, Dadar (Prbhadevi), Mumbai - 400 028, டெல்லி (வடக்கு மண்டலம்) அலுவலகம் என்றால் ECIL, D-15, DDA Local Shopping Complex, A-Block, Ring Road, Naraina, New Delhi - 110028 என்ற முகவரியிலும், கொல்கத்தா (கிழக்கு மண்டலம்) என்றால் ECIL, Apeejay House, 4th floor, 15-Park Street, Kolkata - 700016 என்ற முகவரியிலும் நேர்க்காணல் நடைபெற உள்ளது.

ஹைதரபாத் தலைமை அலுவலகம் என்றால் CLDC, Nalanda Complex, TIFR Road, Electronics Corporation of India Limited, ECIL Post, Hyderabad-62 என்ற முகவரியிலும், விசாகப்பட்டினம் மண்டலம் அலுவலம் என்றால் ECIL, 47-09-28, Mukund Suvasa Apartments, 3 rd Lane, Dwaraka Nagar, Visakhapatnam-530016 என்ற முகவரியிலும், பெங்களூர் (தெற்கு மண்டலம்) ECIL, 1/1, 2nd floor, LIC Building, Sampige Road, Malleswaram, Bengaluru - 560 003 என்ற முகவரியிலும் நடைபெற உள்ளது. அனைத்து நேர்க்காணல்களும் காலை 11.30 மணிக்கு நடைபெற உள்ளது.

பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here

பணிக்கான விண்ணப்பத்தை டவுன்லோட் செய்ய Click Here

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+