நாடு முழுக்க பல கோடி ஊழியர்களுக்கு.. மனஉளைச்சல்.. போக்கு காட்டும் EPFO.. அப்போ PF என்ன ஆகும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு வழங்கும் வட்டி இன்னும் பல கோடி ஊழியர்களின் கணக்குகளில் வைக்கப்படாதது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மே 23, 2025 நிலவரப்படி, ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) 2023-24 நிதியாண்டுக்கான வட்டியை உறுப்பினர்களின் கணக்குகளில் இன்னும் வரவு வைக்கவில்லை. அந்த ஆண்டிற்கான 8.25% வட்டி விகிதம் பிப்ரவரி 2024 இல் அறிவிக்கப்பட்டது. ஆனால் நிர்வாக நடைமுறைகள் காரணமாக வட்டி வரவு செயல்முறை தாமதமாகியுள்ளது.

2023-24 நிதியாண்டின் இறுதி (மார்ச் 31, 2024) அதன்பின் 3 மாதங்கள் என்று கணக்கிட்டால் 17 மாதங்களுக்கும் மேலாக EPF உறுப்பினர்கள் தங்கள் கணக்குகளில் வட்டி பெறாமல் காத்திருக்கிறார்கள. குறிப்பாக ஒவ்வொரு நிதி ஆண்டிலும் அந்த நிதி ஆண்டு இறுதியில் வட்டி வழங்கப்படும். ஆனால் இந்த முறை வட்டி வழங்கப்படவில்லை. ஆனாலும் அடுத்த சில வாரங்களில் வட்டி கணக்கீடு நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.

நாடு முழுக்க ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பிற்கு pF வழங்கும் பல கோடி பேர் இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். அதே சமயம் ஏப்ரல் மாதத்தில் புதிதாக வேலைக்கு சேர்ந்த பணியாளர்களுக்கு, அதாவது முதல்முறை வேலை பார்க்கும் பணியாளர்களுக்கு ரூ. 3000 EPFO கணக்கில் செலுத்தப்பட்டு உள்ளது.

Employees Provident Fund Organisation EPFO has not yet credited the interest for the financial year 2023 24

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) கடந்த ஏப்ரல் மாதம் இணைந்த புதிய உறுப்பினர்களுக்கு குறைந்தபட்சம் ரூ. 3000 EPFO கணக்கில் பணம் வழங்கப்பட்டு உள்ளது. கடந்த சில மாதங்களாக் இந்த தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த மாதமும் இந்த தொகை வழங்கப்பட்டு உள்ளது. ஏப்ரல் மாதத்திற்கான தொகை வங்கி நேரடியாக அவர்களின் EPFO கணக்கில் மே மாதம் செலுத்தப்பட்டு உள்ளது. EPFO இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கிட்டத்தட்ட 12 லட்சம் உறுப்பினர்களை புதிதாக சேர்த்துள்ளதாக தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) நடத்தும் பிஎப் கணக்கில் தொடர்ந்து புதிய உறுப்பினர்கள் இணைந்து வருகின்றனர்.

யாருக்கெல்லாம் வழங்கப்படுகிறது?

ஒவ்வொரு வருடமும்.. ஒவ்வொரு மாதமும் புதிதாக பணிக்கு சேரும் ஊழியர்களுக்கு அவர்களின் நிர்வாகம் சார்பாக EPFO கணக்கு தொடங்கப்படும். இதில் தொழில் உற்பத்தி துறையில் முதல்முறையாக பணிக்கு சேரும் ஊழியர்களின் முதல் வருங்கால வைப்பு நிதி சந்தாவை அரசே செலுத்தும்; அனைத்து துறைகளிலும் கூடுதலாக பணிக்கு அமர்த்தப்படும் தொழிலாளர்களுக்கு வைப்பு நிதி சந்தாவில் ₹3000 அரசு செலுத்தும்.

இபிஎஃப்ஓவில் பதிவு செய்து முதல் முறையாக பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒரு மாத சம்பளத்தை மூன்று தவணைகளில் மத்திய அரசே அவர்களின் இபிஎஃப்ஓ கணக்கில் செலுத்தும். ₹15,000 வரை அதிகபட்சம் மத்திய அரசு செலுத்தும். இதற்கான தகுதி வரம்பு மாதத்திற்கு ₹1 லட்சம் சம்பளமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, பிப்ரவரி மாதத்தில் இபிஎப்ஓவில் இணைந்த 15 லட்சம் உறுப்பினர்களுக்கு குறைந்தபட்சம் ரூ. 3000ல் இருந்து வங்கி கணக்கில் பணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இது அவர்களின் நேரடி வங்கி கணக்கிற்கு செல்லாமல் பிஎப் வங்கி கணக்கிற்கு செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+