HCL IT Jobs: நாளை முதல் 3 நாள் இண்டர்வியூ.. எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் குவிந்திருக்கும் காலியிடங்கள்.. சென்னையில் பணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு நாளை (அக்டோபர் 13) , அக்டோபர் 14, அக்டோபர் 15 ஆகிய 3 நாட்கள் இண்டர்வியூ நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் சென்னையில் நடைபெற உள்ள இண்டர்வியூவில் நேரில் பங்கேற்கலாம்.

தற்போது பல்வேறு ஐடி நிறுவனங்களில் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். இருப்பினும் பல நிறுவனங்களில் ஆட்சேர்ப்பு நடவடிக்கையும் நடந்து வருகிறது. அந்த வகையில் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து தொடர்ந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

அந்த வகையில் தற்போது எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து International Banking Voice Process-ல் 2 பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்கள நிரப்பப்பட உள்ளது. அதன்படி அசோசியேட் (Associate) மற்றும் சீனியர் டீம் லீட் (Senior Team Lead)பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

hcl-hiring-for-international-banking-voice-process-role-and-interview-to-be-held-from-october-13-to

இதில் அசோசியேட் பணியை விரும்புவோர் ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். Inbound calling இருக்கும். சேல்ஸ் மற்றும் அப்செல்லிங் அல்லது கிராஸ் செல்லிங் கிடையாது. மேலும் பிரச்சனைகளை தீர்க்கும் திறன் இருக்க வேண்டும்.

அதேபோல் மல்டிடாஸ்க்கிங் பணி செய்ய தெரிந்திருப்பதோடு, தனிஆளாக நின்று பணி செய்ய வேண்டும். அதேபோல் சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 1 ஆண்டு முதல் 3 ஆண்டு வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாறாக சீனியர் டீம் லீட் (Senior Team Lead) பணிக்கு விண்ணப்பம் செய்வோர் ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். கஸ்டமர் சர்வீஸ் என்விரான்மென்ட் அல்லது வாய்ஸ் ப்ராசஸ் பிரிவில் குறைந்தபட்சம் 3 - 4 ஆண்டுகள் வரை டீம் லீட் அல்லது சூப்பர்வைசரி ரோலில் பணியாற்றி இருக்க வேண்டும். ஸ்ட்ராங் லீடர்ஷிப் மற்றுமு் மேனேஜ்மென்ட் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும்.

இந்த பணிக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் பிரச்சனைகளை தீர்க்கும் திறன் இருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பின்படி இருபணிகளுக்குமான மாதசம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

பணி அனுபவம், திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். இந்த பணிக்கான இண்டர்வியூ நாளை முதல் 3 நாட்கள் சென்னையில் நடைபெற உள்ளது.

அதன்படி நாளை (அக்டோபர் 13), நாளை மறுநாள் (அக்டோபர் 14), அக்டோபர் 15 ஆகிய தேதிகளில் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை இண்டர்வியூ நடைபெறும். இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் அன்றைய தினம் HCL Technologies - AMB 6, South Phase, Ambattur Industrila Estate, 8, Madras, Thiruvallur High Road, Ambattur, chennai, Tamil Nadu 600 076 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். அங்கு வைத்து தான் இண்டர்வியூ நடைபெற உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+