மதுரை ஐடி வேலை.. MBR - HR முடித்தோருக்கு HCL-லில் இன்டர்ன்ஷிப் சான்ஸ்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்
மதுரை: மதுரையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் நிறுவனத்தில் இருந்து இன்டர்ன்ஷிப் வாய்ப்பு வழங்கப்படுகிறது. எம்பிஏ -எச்ஆர் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்து பயன்பெறலாம். இதுபற்றிய முழு விவரங்கள் வருமாறு:
சென்னையை போல் மதுரையில் எச்சிஎல் ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. மதுரை இலந்தைகுளம் பாண்டி கோவில் ரிங் ரோட்டில் அமைந்து இருக்கும் ElCOT IT SEZ-ல் எச்சிஎல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
மதுரை எச்சிஎல் நிறுவனத்தில் இருந்து அவ்வப்போது காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தான் தற்போது இன்டர்ன்ஷிப் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

அதன்படி மதுரை எச்சிஎல் நிறுவனத்தில் தற்போது Talent Acquisition Intern என்ற ரோலுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு MBR - HR முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பம் செய்யலாம். இதற்கு மொத்தம் 3 மாதம் (90 நாட்கள்) இன்டர்ன்ஷிப் காலமாகும்.
இன்டர்ன்ஷிப் மதுரையில் உள்ள எச்சிஎல் அலுவலகத்திலேயே தான் இருக்கும். இதனால் மதுரை மற்றும் அதனை சுற்றிய இடங்களில் வசிப்பவர்கள் விண்ணப்பம் செய்யாம். விண்ணப்பம் செய்வோருக்கு சில முக்கிய தகுதிகள் இருக்க வேண்டும்.
அதன்படி 2024 2025 ம் ஆண்டில் PGDHRD/PGDM/MSW/MBA முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். குறிப்பாக இவை அனைத்தையும் HR பிரிவில் முடித்திருக்க வேண்டும். அதேபோல் ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
எம்எஸ் எக்ஸல் மற்றும் எம்எஸ் வேர்ட்ஸ் உள்ளிட்டவற்றில் அடிப்படை தெரிந்திருக்க வேண்டும். அதேபோல், எச்ஆர் கான்செப்ட்டின் அடிப்படை தெரிந்திருக்க வேண்டும். அதாவது பிரைமரிலி ரெக்ரூட்மென்ஸ் மற்றும் ஆன்போர்ட்டிங் பற்றி அறிந்திருக்க வேண்டும்.
இந்த பணி என்பது முழுக்க முழுக்க அலுவலகம் வந்து செய்ய வேண்டியிருக்கும். வீட்டில் இருந்து பணி செய்ய அனுமதி கிடையாது. வாரத்தில் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 9.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை பணி இருக்கும்.
இந்த பணிக்கு சம்பளம் அல்லது Stipend எதுவும் கிடையாது. மாறாக இன்டர்ன்ஷிப் சர்ட்டிபிகேட் வழ்கப்படும். இது உடனடிய ரெக்ரூட்மென்ட். எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்து சேரலாம். விண்ணப்பம் செய்ய விரும்புவோர் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள முகவரியை பயன்படுத்தி விண்ணப்பம் செய்யலாம்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications