HCL ஐடி நிறுவனத்தில் காலியிடங்கள்.. மதுரையிலேயே பணி நியமனம்! ரெடியா?
மதுரை: எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் காலியாக உள்ள சர்வீஸ் டெஸ்க் அனலிஸ்ட் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பணிக்கு தேர்வாகும் நபர்கள் மதுரையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்து பயன் பெறலாம்.
நம் நாட்டில் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக எச்சிஎல் செயல்பட்டு வருகிறது. இதன் தலைமை அலுவலகம் டெல்லி அருகே உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் அமைந்துள்ளது.

இதுதவிர பல்வேறு முக்கிய நகரங்களில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தை எடுத்து கொண்டால் சென்னை, மதுரையில் எச்சிஎல் ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் மதுரையில் உள்ள எச்சிஎல் நிறுவனத்தில் சர்வீஸ் டெஸ்க் அனலிஸ்ட் (Service Desk Analyst) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்பம் செய்வோர் குறிப்பிட்ட பிரிவில் குறைந்தபட்சம் 6 மாதம் முதல் 3 ஆண்டுக்கு மேற்பட்ட அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். திறமை மற்றும் பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் மதுரையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
மதுரையில் எச்சிஎல் ஐடி நிறுவனம் மாட்டுத்தாவணி அருகே செயல்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடியலாம். எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications