3 பிரிவுகளில் காலியிடங்கள்.. நாளை முதல் 2 நாள் இண்டர்வியூ.. சென்னை HCL-லில் ஐடி வேலை
சென்னை: முன்னணி ஐடி நிறுவனமான எச்சிஎல் சார்பில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. 3 பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிக்கான இண்டர்வியூ சென்னையில் நாளை (அக்டோபர் 27) மற்றும் நாளை மறுநாள் (அக்டோபர் 28) ஆகிய 2 நாட்கள் நடைபெற உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
எச்சிஎல் சார்பில் அடுத்தடுத்து வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இப்போது புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியாக உள்ள 3 பிரிவுகள் தொடர்பாக இங்கு பார்க்கலாம்.

இதில் முதலில் பார்ப்பது ஓடிசி கலெக்சன் (OTC Collections) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணியை விரும்புவோர் குறிப்பிட்ட பிரிவில் ஏதாவது ஒரு டிகிரி படிப்பை முடித்திருக்க வேண்டும். அதேபோல் ஓடிசி கலெக்சன் பிரிவில் குறைந்தபட்சம் 2 ஆண்டு முதல் அதிகபட்சம் 7 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
2வது பணி என்னவென்றால் ஓடிசி டிஸ்புஸ்ட் மேனேஜ்மென்ட் (OTC Dispute management). இந்த பணிக்கு குறைந்தபட்சம் 4 ஆண்டுகள் முதல் அதிகபட்சமாக 8 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். 3வது பணி என்னவென்றால் ஓடிசி அக்கவுண்ட் ஆக்டிவேஷன் அண்ட் செட்அப் (OTC Account Activation and Setup) பணியாகும். இந்த பணிக்கும் 3 ஆண்டு முதல் 7 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
பணி என்பது US shift முறையில் இருக்கும். இதனால் இரவு பணிக்கு தயாராக இருக்க வேண்டும். இந்த பணிக்கான பிற தகுதிகள் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பின் பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். பணி அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும்.
இந்த பணிக்கான இண்டர்வியூ நாளை (அக்டோபர் 27) மற்றும் நாளை மறுநாள் (அக்டோபர் 28) ஆகிய நாட்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்பவோர் HCL Technologies Ltd, Tower 4, No.602/3/138, Special Economic Zone, Elcot -SeZ, Medavakkam High Road, Sholinganallur, Chennai - 600 119 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும்.
இண்டர்வியூ செல்வோர் Resume, ஆதார், பான் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்றை உடன் எடுத்து செல்ல வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை நாவலூரில் உள்ள அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்து நாளை, நாளை மறுநாள் நடக்கும் இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
மதுரையில் வேலை.. சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணி.. 127 பணியிடங்கள்! 12 ஆம் வகுப்பு தகுதி தான்! -
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் வேலை.. 4,500 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்.. செம சான்ஸ்! -
RRB ALP: இந்தியன் ரயில்வேயில் 11,127 பணியிடங்கள்.. இன்றே கடைசி நாள்.. செம வாய்ப்பு.. விட்றாதீங்க! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம்












Click it and Unblock the Notifications