டைப்பிங் தெரியுமா? அனுபவம் வேண்டாம்.. அழைக்கும் HCL.. மார்ச் 5 டூ 3 நாள் இண்டர்வியூ.. சென்னையில் பணி
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் மார்ச் 5ம் தேதி முதல் மார்ச் 7 ம் தேதி வரை இண்டர்வியூ நடைபெற உள்ளது. டிகிரி முடித்து பணி அனுபவம் இல்லாதவர்கள் இந்த இண்டர்வியூவில் பங்கேற்கலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் அம்பத்தூரில் உள்ள எச்சிஎல் நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
இந்தியா உள்பட வெளிநாடுகளில் செயல்பட்டு வரும் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக எச்சிஎல் உள்ளது. தமிழகத்தில் சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் இந்த நிறுவனம் உள்ளது.

இந்நிலையில் தான் தற்போது எச்சிஎல் சார்பில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு:
தற்போதைய அறிவிப்பின்படி எச்சிஎல் நிறுவனத்தில் Process Associate பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு முன் அனுபவம் என்பது தேவையில்லை. இந்த பணிக்கு 2024ம் ஆண்டில் ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். குறிப்பாக பிகாம், பைனான்ஸ் பிரிவில் படிப்பை முடித்தவர்களுக்கு முன்னுரிமை என்பது வழங்கப்படும். பிஇ, பிடெக் படிப்பை முடித்தவர்கள் இண்டர்வியூவில் பங்கேற்க முடியாது. மாறாக பிற பிரிவில் டிகிரி முடித்தவர்களுக்கு சில முக்கிய தகுதிகள் என்பது இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி டைப்பிங் தெரிந்திருக்க வேண்டும். ஒரு நிமிடத்தில் 30 வார்த்தைகள் 90-95 சதவீத பிழைகள் இன்றி டைப் செய்ய தெரிந்திருக்க வேண்டும். MS Office-ல் Word, Excel உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும்.நல்ல அனலிட்டிக்கல் ஸ்கில்ஸ் மற்றும் Interpretation skills இருக்க வேண்டும். அதேபோல் கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் என்பது இருக்க வேண்டும். அதோடு விண்ணப்பதார்களுக்கு புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளும் திறமை என்பது இருக்க வேண்டும். UK ஷிப்ட்டில் ரோட்டேஷன் முறையில் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும்.
இந்த பணிக்கான இண்டர்வியூ என்பது மார்ச் 5ம் தேதி முதல் மார்ச் 7ம் தேதி வரை 3 நாட்கள் நடக்கும். இந்த 3 நாட்களும் காலை 11.30 மணி முதல் மதியம் 3 மணி வரை இண்டர்வியூ என்பது நடைபெறும். இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் 8, South Phase, MTH Road, Ambattur Industrial Estate, Ambattur, Chennai, Tamil Nadu 600 058 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும்.
பணிக்கு தேர்வாகும் நபர்கள் அம்பத்தூரில் நியமனம் செய்யப்பட உள்ளனர். அலுவலகத்தில் இருந்து 30 கிலோமீட்டர் சுற்றளவுக்கு Cab வசதி என்பது ஏற்படுத்தப்பட்டுள்ளது. பெண்களுக்கு Cab சேவை இலவசமாகும். சம்பளம் பற்றிய விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications