IT Jobs: Excel தெரிந்தால் போதும்.. எச்சிஎல் ஐடி நிறுவனம் தரும் அசத்தலான வேலைவாய்ப்பு.. ஆன்லைனில் இண்டர்வியூ
சென்னை: முன்னணி ஐடி நிறுவனமான எச்சிஎல் சார்பில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு Excel, Power Point தெரிந்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வோர் ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்டு ஆன்லைன் இண்டர்வியூவுக்கு அழைக்கப்படுவார்கள்.
முன்னணி ஐடி நிறுவனமான எச்சிஎல் சார்பில் அடுத்தடுத்து வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது எச்சிஎல் நிறுவனத்தில் Voice - Non Voice based Non Technical Process பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த பணியை விரும்புவோருக்கு என்னென்ன தகுதிகள் வேண்டும்? என்பது பற்றிய விவரம் வருமாறு: இந்த பணிக்கு விண்ணப்பிப்போர் ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி படிப்பை முடித்திருக்க வேண்டும்.
அதன்பிறகு MS Excel, VBA Macro மற்றும் பவர் பாயிண்ட் உள்ளிட்டவற்றில் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 3 ஆண்டு முதல் 4 ஆண்டுகள் வரை அந்த பணியில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். அதேபோல் ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். மல்டி டாஸ்க்கிங் திறமை இருக்க வேண்டும்.
MS Access & SQL & Power BI Proficiency உள்ளிட்டவற்றை தெரிந்து வைத்திருப்பது பிளஸ் பாயிண்ட்டாகும். இது முழுவதும் இரவு பணியாகும். தேர்வாகும் நபர்கள் நைட் ஷிப்ட்டில் தான் பணியாற்ற வேண்டி இருக்கும். வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை இருக்கும். 2 நாட்கள் விடுமுறை வழங்கப்படும்.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். இந்த பணிக்கான இண்டர்வியூ ஆன்லைனில் நடைபெறும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வழியாக விண்ணப்பம் செய்யலாம்.
இப்படி விண்ணப்பம் செய்வோர் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு இண்டர்வியூவுக்கு அழைக்கப்படுவார்கள். ஆன்லைன் இண்டர்வியூ விவரம் இ-மெயில் அல்லது தொலைபேசி வழியாக தெரிவிக்கப்படும். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. எனவே எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம். இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யவது நல்லது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications