சென்னையில் நாளை மறுநாள் இண்டர்வியூ.. நாவலூர் HCL அலுவலகத்தில் வேலை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னணி ஐடி நிறுவனமான எச்சிஎல் சார்பில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கான இண்டர்வியூ சென்னையில் ஆகஸ்ட் 7 ம் தேதி காலை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை நாவலூரில் உள்ள எச்சிஎல் அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான எச்சிஎல் சார்பில் அடுத்தடுத்து வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இப்போது புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன் முழு விவரம் வருமாறு:

it jobs jobs job

எச்சிஎல் நிறுவனத்தில் தற்போது ஓடிசி கலெக்சன் (OTC Collections) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு குறிப்பிட்ட தகுதிகள் இருக்க வேண்டும்.

அதன்படி விண்ணப்பம் செய்வோர் ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். கலெக்சன் பிரிவில் நல்ல அறுிவு பெற்றிருக்க வேண்டும். ஓடிசி கலெக்சன் பணியில் குறைந்தபட்சம் 2 ஆண்டு முதல் அதிகபட்சம் 5 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். பிபிள் மேனேஜ்மென்ட் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும்.

பணிக்கு தேர்வாகும் நபர்கள் கேஷ் கலெக்சன், அக்கவுண்ட்மேனேஜ்னெமன்ட், கஸ்டமர் ரிலேஷன்ஸ், கண்ட்ரோல் காம்பியன்ஸி (Control Compliancy), உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். பணி என்பது சுழற்சி அடிப்படையில் இருக்கும் என்பதால் அனைத்து ஷிப்ட்டுகளிலும் பணியாற்ற ரெடியாக இருக்க வேண்டும். குறிப்பாக நைட்ஷிப்ட் பார்க்க தயாராக இருக்க வேண்டும். வாரம் 5 நாட்கள் தான் பணி இருக்கும். 2 நாட்கள் விடுமுறை வழங்கப்படும்.

தற்போதைய அறிவிப்பின் பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். பணி அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். இந்த பணிக்கான இண்டர்வியூ சென்னையில் ஆகஸ்ட் 7 ம்தேதி காலை 10 மணி முதல் மதியம் 2.30 மணி வரை நடைபெற உள்ளது.

இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் ETA 3- HCL Navalur Block 1, Sandhya infocity, OMR, Rajiv Gandhi Salai, Navalur, Chennai, Tamil Nadu 600130 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். இண்டர்வியூவுக்கு செல்வோர் 2 Resume, 2 ஐடி ப்ரூப் எடுத்து செல்ல வேண்டும்.

பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை நாவலூரில் உள்ள அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்து ஆகஸ்ட் 7 ம்தேதி நடக்கும் இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+