Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IT Jobs: HCL அலுவலகத்தில் அசத்தலான வேலை.. நவம்பர் 8ம் தேதி இண்டர்வியூ.. மிஸ் பண்ணாதீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக உள்ள எச்சிஎல்-லில் இருந்து தற்போது கிளவுட் இன்ஜினியர் (Cloud Engineer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கான இண்டர்வியூ நாளை மறுநாள் (நவம்பர் 8) நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்து இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.

உத்தர பிரதேசத்தை மாநிலம் நொய்டாவை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் எச்சிஎல் ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தற்போது பல நிறுவனங்கள் பணி நீக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இருப்பினும் எச்சிஎல் ஐடி நிறுவனம் தொடர்ந்து காலிப்பணியிடங்களை நிரப்பி வருகிறது. அந்த வகையில் தான் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் தற்போது GCP Cloud Engineer பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

hcl-tech-walk-in-drive-at-hyderabad-for-cloud-engineer-role-on-november-8

பணிக்கு தேர்வாகும் நபர்கள் சீனியர் பேக்எண்ட் டெவலப்பர் ஜிசிபி டேட்டா இன்ஜினியர் ரோலில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 5 ஆண்டு முதல் 10 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

குறிப்பிட்டு கூற வேண்டும் என்றால் டேட்டா வார்ஹவுசிங் புராஜெக்ட்டில் 5 ஆண்டு அனுபவம் கொண்டிருக்க வேண்டும். ஜிஜிபி டேட்டா இன்ஜினியரிங் டூல்ஸ் மற்றும் சர்வீசஸில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

IAM, GCS, Dataflow, BigQuery, Python/PySpark உள்ளிட்டவற்றில் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும். அதேபோல் ஜிசிபியை பயன்படுத்தி இடிஎல் பைப்லைன் இம்ளிமென்டேஷனில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். கிளவுட் கம்போசர/ஏர்ஃப்ளோ (Cloud Composer/Airflow), கிளவுட் ஸ்பேனர் (Cloud Spanner) உள்ளிட்டவற்றில் அறிவை பெற்றிருக்க வேண்டும்.

அதேபோல் Azure அல்லது ஏடபிள்யூஎஸ் கிளவுட் பிளாட்பார்ம் தெரிந்திருக்க வேண்டும். Pub/Subஅனுபவம் இருப்பது நல்லது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்லது Naukri விண்ணப்பம் செய்யலாம். அல்லது [email protected] என்ற முகவரிக்கு ரெஸ்யூம் அனுப்பி வைக்க வேண்டும்.

தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம், திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். இந்த பணிக்கான நவம்பர் 8 ம் தேதி நடைபெற உள்ளது. விண்ணப்பம் செய்வோருக்கு இண்டர்வியூவுக்கான தேதி, நேரம் உள்ளிட்ட விவரங்கள் அனுப்பி வைக்கப்படும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் ஹைதராபாத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+