B.com - MBA முடித்தோருக்கு ஜாக்பாட்.. HCL நிறுவனம் தரும் அசத்தலான வேலை.. ஆகஸ்ட் 28ல் இண்டர்வியூ
சென்னை: பிரபல ஐடி நிறுவனங்களில் ஒன்றான எச்சிஎல் சார்பில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கான இண்டர்வியூ சென்னையில் ஆகஸ்ட் 28ம் தேதி நடைபெற உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் நாவலூரில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான எச்சிஎல் சார்பில் அடுத்தடுத்து வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இப்போது புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன் முழு விவரம் வருமாறு:

எச்சிஎல் நிறுவனத்தில் தற்போது ஓடிசி கலெக்சன் (OTC Collections), ஆர்டர் மேனேஜ்மென்ட் (Order Management), கேஷ் அப்ஸ் (cash Apps) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணியை விரும்புவோர் பிகாம், எம்பிஏ (பைனான்ஸ்) படிப்பை படித்து இருக்க வேண்டும். அதேபோல் ஓடிசி கலெக்சன் பிரிவில் குறைந்தபட்சம் 2 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். நைட் ஷிப்ட் (US Shift) பார்க்க தயாராக இருக்க வேண்டும். எம்எஸ் ஆபீசில் பணியாற்ற தெரிந்திருக்க வேண்டும்.
Negotiation திறமை, அனலிட்டிக்கல் மற்றும் பிரச்சனைகளை தீர்க்கும் திறன் இருக்க வேண்டும். டீம் பிளேயராகவும் இருக்க வேண்டும், Project Methodology அனுபவம் இருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பின் பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். பணி அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும்.
இந்த பணிக்கான இண்டர்வியூ ஆகஸ்ட் 28ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் ETA 2, Sandhya Infocity - HCL Tech, Navalur என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். ஒவ்வொருவரும் 4 Updated Resume வைத்திருக்க வேண்டும். அதேபோல் ஆதார், பார்ன் கார்டு, லைசென்ஸ் என்று ஏதாவது ஒரு அரசு அடையாள அட்டை எடுத்து செல்ல வேண்டும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
IT Jobs: நாளை காலை 11 மணிக்கு சென்னையில் இண்டர்வியூ.. அனுபவம் வேண்டாம்.. அழைக்கும் HCL -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!












Click it and Unblock the Notifications