HCL வேலைவாய்ப்பு.. சென்னையிலேயே பணி.. இன்று முதல் ஏப்ரல் 12 வரை இண்டர்வியூ
சென்னை: சென்னை எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. டிகிரி முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம். பணிக்கான இண்டர்வியூ என்பது இன்று (ஏப்ரல் 7) முதல் ஏப்ரல் 12ம் தேதி வரை நடைபெற உள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவை தலைமையிடமாக கொண்டு எச்சிஎல் ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

அந்த வகையில் தற்போது வெளியாகி உள்ள அறிவிப்பின் முக்கிய அம்சங்கள் என்ன? யாரெல்லாம் இண்டர்வியூவில் பங்கேற்கலாம் என்பது பற்றிய முழு விபரம் வருமாறு:
எச்சிஎல் நிறுவனத்தில் Walk In Drive for Fresher என்ற பெயரில் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்வாகும் நபர்கள் Voice Process பணியில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இந்த பணியை விரும்புவோர் குறைந்தபட்சம் ஏதாவது ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். பிஇ, பிடெக் படிப்புகளை படித்தவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டாம்.
விண்ணப்பம் செய்வோருக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். டேட்டா என்ட்ரி மற்றும் டைப்பிங் ஸ்கில்ஸ் இருந்தால் அது பிளஸ் பாயிண்ட்டாகும். பிரச்சனைகளை தீர்க்கும் திறன், முடிவெடுக்கும் திறன் இருக்க வேண்டும். அதுமட்டுமின்றி எந்த வகையான ஷிப்ட்டாக இருந்தாலும் பணி செய்ய தயாராக இருக்க வேண்டும். இரவு பணிக்கும் தயாராக இருக்க வேண்டும்.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் பற்றிய விபரம் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசிகட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். தேர்வாகும் நபர்களுக்கு வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே பணி இருக்கும். வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை என்பது வழங்கப்படும். பணியாளர்களுக்கு Cab வசதி உள்ளது. ஆனால் அதற்கு தனியாக கட்டணம் என்பது செலுத்த வேண்டும்.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள எச்சிஎல் நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கான இண்டர்வியூ என்பது இன்று (ஏப்ரல் 7) முதல் ஏப்ரல் 12ம் தேதி வரை தினமும் காலை 11 மணி முதல் 2 மணி வரை நடைபெறும். இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் HCL TECH, Sholinganallur ELCOT campus, Tower 4, Chennai-119 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் வேலை.. 4,500 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்.. செம சான்ஸ்! -
RRB ALP: இந்தியன் ரயில்வேயில் 11,127 பணியிடங்கள்.. இன்றே கடைசி நாள்.. செம வாய்ப்பு.. விட்றாதீங்க! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ்












Click it and Unblock the Notifications