அனுபவம் வேண்டாம்.. டிகிரி மட்டும் போதும்.. நவம்பர் 24-25ல் சென்னையில் இண்டர்வியூ.. நாவலூரில் பணி
சென்னை: முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக உள்ள எச்சிஎல்-லில் இருந்து தற்போது புதிய வேலைவாய்ப்பு பற்றி அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு அனுபவம் தேவையில்லை. ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்து நவம்பர் 24, 25 ஆகிய தேதிகளில் சென்னைய நாவலூரில் நடைபெறும் இண்டர்வியூவில்பங்கேற்கலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை நாவலூரிலேயே நியமனம் செய்யப்பட உள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவை தலைமையிடமாக கொண்டு எச்சிஎல் ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் அலுவலகம் சென்னை மட்டுமின்றி நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் உள்ளது.

அதுமட்டுமின்றி வெளிநாடுகளிலும் எச்சிஎல் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் சென்னை அலுவலகத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதன்படி எச்சிஎல் நிறுவனத்தில் International Voice Process பிரிவில் காலிப்பணியிடங்களை நிரப்பப்பட உள்ளது. இந்த பணிக்கு ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்திருந்தால் போதும். பிஏ, பிஎஸ்சி, பிகாம் உள்பட ஏதாவது ஒரு பாடப்பிரிவில் கல்லூரி படிப்பை முடித்து பணி அனுபவம் இல்லாமல் இருந்தாலும் விண்ணப்பம் செய்யலாம். அதேவேளையில் இன்ஜினியரிங், எம்சிஏ, பிடெக் உள்ளிட்ட படிப்புகளை படித்தவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பம் செய்வோருக்கு சில முக்கிய தகுதிகள் வேண்டும். அதன்படி ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.புதிய டெக்லானலஜியை கற்கும் திறன் இருக்கவேண்டும்.நன்கு கவனிக்கும் திறன் இருக்க வேண்டும். டீம் பிளேயராகவும்,தனி ஆளாகவும் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். லீடர்ஷிப் ஸ்கில்ஸ், பிபிள் மேனேஜ்மென்ட் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். கஸ்டமர் கேர் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும்.
பணி US ஷிப்ட் அடிப்படையில் பணி இருக்கும். இதனால் இரவு பணிக்கு தயாராக இருக்க வேண்டும். வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை நாட்கள். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமாகும். இந்த பணியை வீட்டில் இருந்து செய்யவோ அல்லது ஹைபிரிட் மாடலில் பணிபுரியும் வாய்ப்பு கிடையாது. அலுவலகம் சென்று தான் பணியாற்ற வேண்டும்.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம், திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை நாவலூரில் உள்ள அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
இதற்கான இண்டர்வியூ நவம்பர் 24, 25 என 2 நாட்கள் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் Navallur, Sandhiya Infocity, ETA 3 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். இண்டர்வியூவில் பங்கேற்போர் 2 ரெஸ்யூம், ஆதார், பார்ன் கார்டு, லைசென்ஸ் உள்ளிட்டவற்றில் ஏதாவது ஒரு அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் வேலை.. 4,500 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்.. செம சான்ஸ்! -
RRB ALP: இந்தியன் ரயில்வேயில் 11,127 பணியிடங்கள்.. இன்றே கடைசி நாள்.. செம வாய்ப்பு.. விட்றாதீங்க! -
IT Jobs: HCL-யில் காலியிடங்கள்.. ஜூன் 20ம் தேதி சென்னை, பெங்களூர் உள்பட 3 இடங்களில் இண்டர்வியூ -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம்












Click it and Unblock the Notifications