For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

8105 பேருக்கு வங்கி வேலை ‛ரெடி’! ஐபிபிஎஸ் வெளியிட்ட புதிய அறிவிப்பு! விண்ணப்பிப்பது எப்படி?

Google Oneindia Tamil News

டெல்லி: வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (ஐபிபிஎஸ்) சார்பில் 8105 பணியிடங்கள் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்தியாவின் பல்வேறு வங்கிகளுக்கு ஆட்சேர்ப்பு பணியை வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (ஐபிபிஎஸ்) மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தான் ஐபிபிஎஸ் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.

இதில் வங்கிகளில் குரூப் ஏ, குரூப் பி அதிகாரி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதுபற்றி அறிவிப்பின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

டிகிரி முடித்திருந்தால் போதும்! ரூ.40,000 சம்பளத்தில் விமான ஆணையத்தில் பணி! விண்ணப்பிப்பது எப்படி?டிகிரி முடித்திருந்தால் போதும்! ரூ.40,000 சம்பளத்தில் விமான ஆணையத்தில் பணி! விண்ணப்பிப்பது எப்படி?

8105 பணியிடங்கள்

8105 பணியிடங்கள்

ஐபிபிஎஸ் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி மொத்தம் 8,105 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதன்படி 483 Office Assistant, 2676 Office Scale I பணியாளர், 745 General Banking Officer, 57 Information Technology officer, 19 chaterred Accountant, 18 Law officer , 10 Treasury officer, 6 Marketing Officer, 12 Agriculture Officer, 80 Officer Scale III (Senior Manager) பணியிடங்கள் காலியாக உள்ளன.

படிப்பு, வயது வரம்பு என்ன?

படிப்பு, வயது வரம்பு என்ன?

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலை, கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பு அல்லது எம்பிஏ, சிஏ, என்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும். அதோடு விண்ணப்பத்தாரர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆகவும், அதிகபட்சமாக 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். இவர்களின் வயது 2022 ஜூன் மாதம் 1ம் தேதியை அடிப்படையாக கொண்டு கணக்கீடப்படும்.

கடைசி நாள் என்ன?

கடைசி நாள் என்ன?

இதற்கு விண்ணப்ப கட்டணமாக எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.175 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு ரூ.850 கட்டணமாக உள்ளது. விண்ணப்பம் செய்ய ஜூன் 27 கடைசிநாளாகும். விண்ணப்பத்தை www.ibps.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று படிவம் பதிவிறக்கி பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களுடன் அனுப்ப வேண்டும்.

 கூடுதல் விபரங்கள் அறிவது எப்படி?

கூடுதல் விபரங்கள் அறிவது எப்படி?

விண்ணப்பத்தாரர்கள் முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முகததேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். கூடுதல் விபரங்களை www.ibps.in இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம். முறையான அறிவிப்பை https://www.ibps.in/wp-content/uploads/RRB_XI_ADVT.pdf கிளிக் செய்து அறியலாம். பதவியின் அடிப்படையில் விண்ணப்பம் செய்ய https://www.ibps.in/crp-rrb-xi/ கிளிக் செய்து பயன் பெறுங்கள்.

English summary
Institute of Banking Personnel Selection (IBPS) will release the 8105 Jobs this Year 2022. Interested candidate will apply before june 21, 2022.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X