சென்னை ஐஐடியில் வேலை பார்க்க சூப்பர் சான்ஸ்..லட்சங்களில் சம்பளம்..டிகிரி முடிச்சவங்க அப்ளை பண்ணலாம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை ஐஐடி-யில் 23 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. குரூப்-ஏ, குரூப்-பி மற்றும் குரூப்-சி பிரிவுகளில் 8-வகையான பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியகியுள்ளது. ஜூனியர் அஸ்சிஸ்டண்ட் பணிக்கு ரூ. 21,700 முதல் Rs.69,100 வரையும், லைப்ரேரியன் பணிக்கு ரூ.1,44,200 முதல் ரூ. 2,18,200 வரை வழங்கப்படும். இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.

நாட்டில் உள்ள உயரிய கல்வி நிறுவனங்களில் ஒன்று சென்னை ஐஐடி. மிகவும் புகழ்பெற்ற இந்த கல்வி நிறுவனத்தில் படித்தால் தனி கவுரவம் கிடைக்கும் என்று சொல்லும் அளவுக்கு தனித்துவமான மதிப்பை கொண்டது ஐஐடி மெட்ராஸ். மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்த கல்வி நிறுவனனத்தில் கல்வி பணி அல்லாத நிர்வாக பணிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

job chennai Employment

1959 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட சென்னை ஐஐடியில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில் தன் ஐஐடியில் நிர்வாக பணிகளில் காலியாக உள்ள 23 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்:

1. நூலகர் ( டெபுடேஷன்) - 01
2. தலைமை பாதுகாப்பு அதிகாரி - 01
3. துணை பதிவாளர் - 02
4. தொழில்நுட்ப அதிகாரி - 01
5. உதவி பதிவாளர் - 02
6. ஜூனியர் டெக்னிக்கல் சூப்பிரண்டு - 01
7. ஜூனியர் சூப்பிரண்டு - 05
8. ஜூனியர் உதவியாளர் - 10 என மொத்தம் 23 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

கல்வித் தகுதி:

லைப்ரரியன் எனப்படும் நூலகர் பதவிக்கு லைப்ரரி சயின்ஸ் / இன்பர்மேஷன் சயின்ஸ்/டாகுமண்டேஷன் ஆகிய பிரிவுகளில் முதுகலை பட்டம் பெற்று இருக்க வேண்டும் . 55 சதவீத மதிபெண்களுடன் தேர்ச்சி அவசியம்.மேற்குறிப்பிட்ட பிரிவில் பிஎச்.டி முடித்து இருக்க வேண்டும். 15 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.

* தலைமை பாதுகாப்பு அலுவலர் பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்று இருக்க வேண்டும். 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி அவசியம். 15 வருட பணி அனுபவம் அவசியம்.
* துணை பதிவாளர் பணிக்கு முதுகலை பட்டத்துடன் 5 ஆண்டுகள் பணி அனுபவம் கோரப்பட்டுள்ளது.

* ஜூனியர் சூப்பிரண்டண்ட் பணிக்கு ஏதாவது ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்று இருந்தால் போதும். 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி அவசியம். கணினி புலமை அவசியம்.
* ஜூனியர் உதவியாளர் பணிக்கு ஏதாவது ஒரு பாடப்பிரிவில் முதல் வகுப்பு தேர்ச்சியுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கண்ணி அறிவும் அவசியம். தேர்வர்கள் கல்வி தகுதி மற்றும் இதர தகுதிகள் குறித்த தேர்வு முழு விவரங்களையும் கீழே கொடுக்கப்படுள்ள தேர்வு அறிவிப்பினை படித்து தெரிந்து கொள்ளவும்.

வயது வரம்பு:

நூலகர் (பதவி) - 50 வயது வரை விண்ணப்பிக்கலாம்
தலைமை பாதுகாப்பு அதிகாரி - 50 வயது
துணைப் பதிவாளர் - 50 வயது
தொழில்நுட்ப அதிகாரி - 45 வயது
உதவிப் பதிவாளர் - 45 வயது
ஜூனியர் டெக்னிக்கல் சூப்பிரண்டு - 32 வயது
ஜூனியர் சூப்பிரண்டு - 32 வயது
ஜூனியர் அசிஸ்டென்ட் - 27 வயது
மத்திய அரசு விதிகளை பின்பற்றி வவயது உச்ச வரம்பில் தளர்வுகளும் அளிக்கப்படும்.


சம்பளம் எவ்வளவு?

மத்திய அரசின் கல்வி நிறுவனம் என்பதால் இதர பிரிவு மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவதும் போல 7-வது ஊதிய கமிஷன் பே மேட்ரிக்ஸ் லெவல் படி வழங்கப்படும். பணியின் தன்மைக்கேற்ப சம்பளம் மாறுபடும். ஜூனியர் அஸ்சிஸ்டண்ட் பணிக்கு ரூ. 21,700 to Rs.69,100 வரை வழங்கப்படும். லைப்ரரியன் பணிக்கு Pay Level - AL-14 படி மாதம் ரூ.1,44,200 முதல் ரூ. 2,18,200 வரை வழங்கப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி?

தேர்வு அறிவிப்பினை முழுமையாக படித்து தெரிந்து கொண்ட பின்னர் தேர்வர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் 19.05.2025 கடைசி நாளாகும். விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கும் நாள்: 19.04.2025 ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, மதிப்பெண் சான்றிதழ்கள், வகுப்பு பிரிவு சான்றிதழ், அனுபவ சான்றிதழ் உள்ளிட்ட உ ரிய ஆவணங்களுடன் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு அறிவிப்பினைபடிக்க: https://recruit.iitm.ac.in/include/R425_Detailed_Advt_and_instructions.pdf

தேர்வு முறை:

எழுத்துத்தேர்வு / கணிணி புலமை தேர்வு / திறன் தேர்வு ஆகியவை நடைபெறும். இதில் தேர்ச்சி பெறும் தேர்வர்களுக்கு நேர்முகத்தேர்வு வைக்கப்படும். நேர்முகத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது தேர்வுக்கட்டணமாக ரூ. 500 செலுத்த வேண்டும். எஸ்சி/ எஸ்டி/மாற்றுத்திரனாளிகள் உள்ளிட்ட பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+