Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்திய விமானப்படையில் அக்னிவீரர்களுக்கு வேலை.. 10 ஆம் வகுப்பு தகுதிதான்! விண்ணப்பிப்பது எப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய விமானப்படையில் அக்னிவீர் போர் பிரிவு அல்லாத (Non-Combatant) பணியிடங்களை அக்னிவீரர் வாயு (விமானப்படை) நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை இந்திய விமானப்படை வெளியிட்டுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி த்தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

இந்திய விமானப்படையில் பணியாற்ற வேண்டும் என்ற கனவு கொண்ட இளைஞர்களுக்கு நல்ல வாய்ப்பாக இந்த அறிவிப்பு பார்க்கப்படுகின்றது. அக்னிபாத் திட்டத்தின் கீழ் அக்னிவீர் வாயு (Non-Combatant) பணியிடங்களுக்கு இந்திய விமானப்படை ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது.

Agniveer

பணியிடங்கள், கல்வித் தகுதி:

அக்னிவீரர் -'Non-Combatant'-பிரிவில் ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

கல்வித்தகுதியை பொறுத்தவரை 23.02.2026 தேதிபடி கணக்கிடப்படும். 10 ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்று இருக்க வேண்டும். திருமணம் ஆகாத இளைஞர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 02.07.2005 முதல் 02.01.2009 -க்கு இடைப்பட்ட காலத்திற்குள் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அதாவது அதிகபட்ச வயது வரம்பு 21 க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

சம்பளம் எவ்வளவு:

அக்னி பாத் திட்டம் மூலம் பணிக்கு அமர்த்தப்படும் வீரர்கள் 4 வருடம் மட்டுமே பணியில் இருக்க வேண்டும். இவர்களுக்கு 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் கிடைக்கும்.. 4 வருடங்கள் கழித்து இந்த வீரர்களில் 25 சதவிகிதம் பேர் வரை ராணுவத்தில் நிரந்தரமாக 15 வருட ஒப்பந்தத்தில் சேர்க்கப்படுவார்கள்.

4 வருடம் பணி முடித்த பின்னர் ரூ.10 லட்சம் (வரிப்பிடித்தம் இல்லாமல்) வழங்கப்படும். அத்துடன் சான்றிதழ்கள் வழங்கப்படும். இந்த முறை மூலம் நியமிக்கப்படும் வீரர்கள் 6 மாதம் பயிற்சி பெறுவார்கள். 3.5 ஆண்டுகள் பணி புரிவார்கள்.

தேர்வு முறை:

4 கட்ட தேர்வுகளுக்கு பிறகு அக்னி வீரர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். முதல் கட்டம்- எழுத்துத்தேர்வு, இரண்டாம் கட்டம் உடல் தகுதி தேர்வு, மூன்றாம் கட்டமாக Stream Suitability Test- நடைபெறும்.

நான்காவது கட்டமாக மருத்துவ பரிசோதனை நடைபெறும். குறைந்தபட்சம் 152 செ.மீ உயரம் இருக்க வேண்டும். மார்பளவு: குறைந்தபட்ச விரிவு வரம்பு 5 செ.மீ.. உயரத்துக்கு ஏற்ற எடை இருப்பது கட்டாயம்.

விண்ணப்பிப்பது எப்படி?

ஆர்வம் உள்ளவர்கள் https://agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பப்படிவத்தினை பூர்த்தி செய்ய வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 23.02.2026 ஆகும்.

விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகளை அறிந்து கொள்ள:
https://agnipathvayu.cdac.in/AV/img/non-combatant/02-2026/Guidelines_to_Fill_Application_Forms_Agniveervayu_Non-Combatants.pdf

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+