Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

10, 12 முடித்தாலே போதும்.. கைநிறைய சம்பளத்துடன் சூப்பர் வேலைவாய்ப்பு.. அழைக்கும் ‛நேவி’.. ரெடியா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய கடற்படையில் காலியாக உள்ள Navik பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 10,12ம் வகுப்பு முடித்தவர்கள் ஆன்லைன் மூலம் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத சம்பளமாக ரூ.21,700 முதல் ரூ.47,600 வரை வழங்கப்பட உள்ளது.

இந்திய பாதுகாப்பில் முக்கியமான மூன்று படைகளில் ஒன்று தான் கடற்படை. இந்திய கடற்படையில் காலியாக உள்ள பணியிடங்கள் முறையான அறிவிப்புகளுடன் அவ்வப்போது நிரப்பப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தான் தற்போது காலியாக உள்ள புதிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

காலியிடங்கள் எவ்வளவு?

காலியிடங்கள் எவ்வளவு?

இந்திய கடற்படையில் மொத்தம் 2 பிரிவுகளில் 255 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதன்படி Navik (General Duty) பணிக்கு 225 பேர், Navik (Domestic Branch) பணிக்கு 30 பேர் என மொத்தம் 255 பேர் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பம் செய்ய வேண்டும்.

கல்வி தகுதி என்ன?

கல்வி தகுதி என்ன?

Navik (General Duty) பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 10 மற்றும் 12ம் வகுப்பை முடித்திருக்க வேண்டும். 12ம் வகுப்பில் கணிதம் மற்றும் இயற்பியில் பாடம் படித்திருக்க வேண்டும். Navik (Domestic Branch) பணிக்கு 10ம் வகுப்பு படிப்பை மட்டும் முடித்திருந்தால் போதும்.

வயது வரம்பு என்ன?

வயது வரம்பு என்ன?

பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் 18 வயது முதல் 22 வயதுக்குள் தான் இருக்க வேண்டும். அதன்படி 2001 செப்டம்பர் 1ம் தேதி முதல் 2005 ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் பிறந்தவர்கள் மட்டுமே விண்ணப்பம் செய்ய முடியும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரையும் ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும் வயது தளர்வு உண்டு.

மாத சம்பளம் என்ன?

மாத சம்பளம் என்ன?

Navik (General Duty) மற்றும் Navik (Domestic Branch) பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத சம்பளமாக முதலில் ரூ.21,700 வழங்கப்படும். அதிகபட்சமாக மாதம் ரூ.47,600 வரை வழங்கப்படும். மேலும் பிரதான் அதிகாரி பதவி வரை ப்ரோமோசன் வழங்கப்படும்.

விண்ணப்பம் செய்வது எப்படி?

விண்ணப்பம் செய்வது எப்படி?

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் https://joinindiancoastguard.cdac.in/cgept/அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று விண்ணப்பம் செய்ய வேண்டும். பிப்ரவரி மாதம் 6ம் தேதி காலை 11 மணி முதல் பிப்ரவரி மாதம் 16ம் தேதி மாலை 5.30 மணிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.300 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பணிக்கு விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு, உடற்தகுதி தேர்வு, சான்று சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனைக்கு பிறகு தேர்வு செய்யப்படுவார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+