For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

10ம் வகுப்பு முடித்தாலே போதும்.. மாதம் ரூ.69,000 சம்பளம்.. மத்திய அரசு பணியில் சேர நல்ல வாய்ப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தோ -திபெத் போலீஸ் படையில் ரூ.69,100 சம்பளத்தில் ஏராளமான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு பெண்களும் விண்ணப்பம் செய்யலாம்.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் எல்லை பாதுகாப்பு படை, மத்திய தொழிற்பாதுகாப்பு படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை, இந்தோ -திபெத் எல்லை பிரிவு போலீஸ் உள்பட ஏராளமான படைப்பிரிவுகள் இயங்கி வருகின்றன.

இந்நிலையில் தான் இந்தோ-திபெத் எல்லை போலீஸ் பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் முக்கிய விபரங்கள் வருமாறு:

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் வேலைவாய்ப்பு.. 8 மண்டலங்களில் பணி..விண்ணப்பிக்க நல்ல வாய்ப்புதமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் வேலைவாய்ப்பு.. 8 மண்டலங்களில் பணி..விண்ணப்பிக்க நல்ல வாய்ப்பு

 காலியிடம் எவ்வளவு?

காலியிடம் எவ்வளவு?

இந்தோ - திபெத் எல்லை போலீஸ் பிரிவில் மொத்தம் 6 பிரிவுகளில் 297 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் கான்ஸ்டபிள் (Tailor) பிரிவில் 18, கான்ஸ்டபிள் (Gardener) பிரிவில் 16, கான்ஸ்டபிள் (Cobbler) பிரிவில் 31, கான்ஸ்டபிள் (Safai Karamchari) பிரிவில் 78, கான்ஸ்டபிள் (Washerman) பிரிவில் 89, கான்ஸ்டபிள் (Barber) பிரிவில் 55 என மொத்தம் 297 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு பெண்களும் விண்ணப்பம் செய்யலாம்.

 கல்வி தகுதி என்ன?

கல்வி தகுதி என்ன?

கான்ஸ்டபிள் (Tailor, Gardner, Cobbler) பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 10 படித்து முடித்து சம்பந்தப்பட்ட பிரிவில் சான்றிதழ் படிப்பை முடித்து முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். கான்ஸ்டபிள் (Safai Karamchari, Washerman, Barber) பிரிவுக்கு விண்ணப்பம் செய்வோர் 10ம் வகுப்பு படிப்பை முடித்திருக்க வேண்டும்.

 வயது வரம்பு என்ன?

வயது வரம்பு என்ன?

கான்ஸ்டபிள் பிரிவில் (Tailor, Gardner and Cobbler) பிரிவுக்கு விண்ணப்பம் செய்வோர் குறைந்தபட்சம் 18 வயதும், அதிகபட்சமாக 23 வயதையும் கொண்டிருக்க வேண்டும். அதேவேளையில் கான்ஸ்டபிள் பிரிவுக்கு (Safai karamchari, Washerman, Barber) விண்ணப்பம் செய்ய விரும்புபவர்கள் 18 வயது முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி உள்பட பிற பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது தளர்வு உண்டு.

 ஊதியம் என்ன?

ஊதியம் என்ன?

பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத சம்பளமாக குறைந்தபட்சம் ரூ.21,700 முதல் அதிகபட்சமாக ரூ.69,100 வரை கிடைக்கும். விண்ணப்பம் செய்வோர் உடல்தகுதி தேர்வு (Physical Efficiency Test or PET), உடல்திறன் தேர்வு (Physical Standard Test or PST), எழுத்து தேர்வு, மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட வழிமுறைகளின்படி தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பம் செய்வது எப்படி?

விண்ணப்பம் செய்வது எப்படி?

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்ய டிசம்பர் 22ம் தேதி கடைசி நாளாகும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here

ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here

அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல Click Here

English summary
In Indo-Tibetan Police Force there are many vacancies to be filled with a salary of Rs.69,100. Women can also apply for this.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X