IT Jobs: 4 பிரிவுகளில் காலியிடங்கள்.. அழைக்கும் HCL ஐடி நிறுவனம்.. சென்னையில் ஆக., 21ம் தேதி இண்டர்வியூ
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் அசோசியேட் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்ககான இண்டர்வியூ ஆகஸ்ட் 21ம் தேதி சென்னை அம்பத்தூரில் நடைபெற உள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவை தலைமையிடமாக கொண்டு எச்சிஎல் ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

தற்போது எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் 4 பிரிவுகளில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் முழு விவரம் வருமாறு:
அசோசியேட் (Associate)
அசோசியேட் பணிக்கு ண்ணப்பம் செய்வோருக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். பிரச்சனைகளை தீர்க்கும் திறன் இருக்க வேண்டும். மல்டி டாஸ்க்கிங் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். இன்டர்நேஷனல் வாய்ஸ் ப்ராசஸ் பணியில் குறைந்தபட்சம் ஓராண்டு முதல் 3 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
அனலிஸ்ட் (Analyst)
அனலிஸ்ட் பணிக்கு 4 முதல் 6 ஆண்டு வரை இன்டர்நேஷனல் வாய்ஸ் புராசஸ் பணியில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். பிரச்சனைகளை தீர்க்கும் திறன் இருக்க வேண்டும். மல்டி டாஸ்க்கிங் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும்.
சீனியர் டீம் லீட்(Senior Team Lead)
சீனியர் டீம் லீட் பணிக்கு இளங்கலை பிரிவில் டிகிரி படிப்பை முடித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 3 முதல் 4 ஆண்டு வரை டீம் லீட் அல்லது வாய்ஸ் புராசஸ் சூப்பர்வைசரி அல்லது கஸ்டமர் சர்வீஸ் என்விரான்மென்ட்டில் பணியாற்றிய அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
ஸ்ட்ராங் லீடர்ஷிப் மற்றும் டீம் மேனேஜ்மென்ட் ஸ்கில் இருக்க வேண்டும். ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசோசியேட் மேனேஜர் (Associate Manager)
அசோசியேட் மேனேஜர் பணிக்கு இளநிலை பிரிவில் கல்லூரி படிப்பை முடித்திருக்க வேண்டும். 4 முதல் 6 ஆண் வரை டீம் லீட், வாய்ஸ் புராசஸ் சூப்பர் வைசரி பிரிவில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். ஸ்ட்ராங் லீடர்ஷிப் மற்றும் டீம் மேனேஜ்மென்ட் ஸ்கில் இருக்க வேண்டும். ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிய வேண்டும்.
சென்னையில் பணி நியமனம்
தற்போதைய அறிவிப்பில் பணிக்கான மாதசம்பளம் குறித்த விவரம் எதுவும் தெரிவிக்கவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படலாம். இண்டர்வியூவில் தேர்வாகும் நபர்கள் சென்னையில் உள்ள எச்சிஎல் நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 21ல் இண்டர்வியூ
எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஆகஸ்ட் 21ம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெறும் இண்டர்வியூவில் பங்கேற்கலாம். இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் அன்றைய தினம், HCL Technologies- AMB 6, South Phase, Ambattur Industrial Estate, 8, Madras, Thiruvallur High Rd, Ambattur, Chennai - 600076 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications