IT JOBS: சென்னையில் நாளை காலையில் இண்டர்வியூ + பணி.. TCS தரும் அசத்தலான வாய்ப்பு.. மிஸ் பண்ணாதீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு டிசம்பர் 6ம் தேதி காலையில் இண்டர்வியூ நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த இண்டர்வியூவில் பங்கேற்று பயன் பெறலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ்-ஸில் இருந்து அடுத்தடுத்து புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் இருந்து அனலிஸ்ட் பிரிவிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

it-jobs-tcs-hiring-for-analyst-role-and-interview-on-december-6-in-chennai

இந்த பணிக்கு தேவையான தகுதிகள் என்னென்ன? யாரெல்லாம் விண்ணப்பம் செய்யலாம்? என்பது பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு GGP Managment Console works தெரிந்திருக்க வேண்டும்.

அதேபோல் ஐஏஎம் ரோல்ஸ் மற்றும் ஜிசிபி மேனேஜ்ஸ்மேன் ட் பாலிசி பற்றி அறிந்துிருக்க வேண்டும். கிளவுட் கம்ப்யூட்டிங், செக்யூரிட்டி புரோடோகால்ஸ்களான எஸ்எஸ்எல், டிஎல்எஸ், எச்டிடிபிஎஸ், டிசிபி, யுடிபி, விபிஎன், ஃபயர்வால் உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டம்.
நெட்வொர்க் டிரபிள்சூட்டிங்கை எடுத்து கொண்டால் விபிசி-எஸ்சுி, ஐஏபி டிரபிள்சூட்டிங் தெரிந்திருக்க வேண்டும்.

மேலும் விபிஎன், விபிசி மற்ம் பப்ளிக்/பிரைவேட் நெட்வொர்க்கிங் பிரச்சனைகளை தீர்த்த அனுபவம் இருக்க வேண்டும். லினக்ஸ், விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்டம்களில் பணியாற்ற தெரிந்திருக்க வேண்டம். செக்யூரிட்டி டூல்ஸ்களை எடுத்துகொண்டால் Cloud KMS, Security Command Center உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும்.

இதுதவிர ஆங்கிலத்தில் சரளமாக பேச தெரிந்திருக்க வேண்டம். PowerShell, Python, Shell உள்ளிட்டவற்றின் பேசிக் ஸ்கிரிப்ட்டிங் தெரிந்திருக்க வேண்டும். வெர்ஷன் கண்ட்ரோலை எடுத்து கொண்டால் Git-யில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக Security IAM Engineer பிரிவில் 4 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். பணி அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் வழங்கப்படும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை அல்லது இந்தூர் ஆகிய இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

இந்த பணிக்கான இண்டர்வியூ டிசம்பர் 6ம் தேதி காலையில் நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் அன்றைய தினம் TCS, Kumaran nagar, 515/21-24,TNHB Main Road, Shollinganallur, Chennai - 6000 119 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். அங்கு தான் இண்டர்வியூ நடைபெற உள்ளது.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+