IT Jobs: TCS ஐடி நிறுவனத்தில் வேலை ரெடி.. சென்னை - பெங்களூரில் நியமனம்.. நவம்பர் 22ல் இண்டர்வியூ
சென்னை: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் சென்னை மற்றும் பெங்களூர் அலுவலகத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான இண்டர்வியூ நவம்பர் 22ம் தேதி நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம்.
டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் தற்போது டேட்டா நெட்வொர்க் அட்மின் (Data Network Admin) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு ஏதாவது ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். அதேபோல் இன்னும் சில முக்கிய தகுதிகள் வேண்டும்.

அதன்படி ரூட்டிங் (Routing), ஸ்விட்சிங் (Switching - Cisco) மற்றும் வயர்லெஸ் உள்ளிட்டவற்றில் அனுபவம் இருக்க வேண்டும். நெட்வொர்க் ஆபரேஷன்ஸ் பிரச்சனைகளில் ட்ரபிள்சூட்டிங் தெரிந்திருக்க வேண்டும்.
DR Activities (Network DR) தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் TCP/IP, OSI, UDP, Layer 2 (VLANS, STP, VTP), Rouging Protocols (RIP, EIGRP, OSPF
ஐடிஐஎல் புராசஸ் மற்றும் ஹேண்ட்லிங் இன்சிடென்ட், சேஞ்ச் மற்றும் புராபளம் மேனேஜ்மென்ட் தெரிந்திருக்க வேண்டும்.இவை எல்லாவற்றுக்கும் மேலாக இந்த பணிக்கு குறைந்தபட்சம் 5 ஆண்டு முதல் அதிகபட்சமாக 12 ஆண்டு வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும். அதோடு CCNA சர்ட்டிபிகேட், ஏதாவது ஃபயர்வால் பற்றிய அறிவு இருக்க வேண்டும்.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாத அல்லது ஆண்டு சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். பணி அனுபவம் மற்றும் திறமை அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது. இந்த பணிக்கான இண்டர்வியூ சென்னை மற்றும் பெங்களூரில் நவம்பர் 22ம் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலமாக விண்ணப்பம் செய்யலாம். அப்படி விண்ணப்பம் செய்வோருக்கு இண்டர்வியூக்கான இடம், நேரம் உள்ளிட்ட விவரங்கள் அனுப்பி வைக்கப்படும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை மற்றும் ஙெ்களூரில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
IT Jobs: பெங்களூர் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. ஜூன் 15ல் ஆன்லைனில் இண்டர்வியூ -
RRB ALP: இந்தியன் ரயில்வேயில் 11,127 பணியிடங்கள்.. இன்றே கடைசி நாள்.. செம வாய்ப்பு.. விட்றாதீங்க! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம்












Click it and Unblock the Notifications