தமிழக மருத்துவ துறையில் வேலை.. லேப் டெக்னீஷியன் பணி! மெரிட் அடிப்படையில் நியமனம்.. விட்றாதீங்க
சென்னை: தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் லேப் டெக்னிஷியன் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தேர்வு இன்றி மெரிட் அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. மாதம் ஒரு லட்சத்திற்கு மேல் சம்பளம் கிடைக்க கூடிய இந்த பணிக்கு விண்ணப்பிப்பது எப்படி? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (எம்.ஆர்.பி) மூலமாக நிரப்பபடுகிறது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் கீழ் வரும் மருத்துவமனைகள், மருத்துவ மையங்களில் உள்ள பல்வேறு பணியிடங்களும் இந்த தேர்வு வரியத்தால் தேர்வு நடத்தப்பட்டு நிரப்பப்படுகின்றன.

தமிழக அரசு பணிகளில் சேர வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் இருக்கும் மருத்துவ பணியாளர்கள் இந்த தேர்வு அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருப்பார்கள். இந்த நிலையில்தான், மருத்துவ துறையில் காலியாக உள்ள 60 லேப் டெக்னீஷியன் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கல்வி தகுதி என்ன? வயது வரம்பு என்ன? உள்ளிட்டவை குறித்து இங்கே பார்க்கலாம்.
பணியிடங்கள், கல்வித் தகுதி:
லேப் டெக்னீஷியன் 60 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. கல்வித் தகுதியை பொறுத்தவரை குறைந்ததது இரண்டு ஆண்டுகள் கொண்ட டி.எம்.எல்.டி (Diploma in Medical Laboratory Technology) படிப்பு முடித்து இருக்க வேண்டும். தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து படித்து இருப்பது அவசியம்.
வயது வரம்பு:
18 வயது முதல் 32 வயதுக்கு மிகாதவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைகளை பின்பற்றி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். அதாவது எஸ்சி/எஸ்.டி, பிசி/பிசிம்/ எம்பிசி&டிஎன்சி உள்ளிட்ட படிப்புகளுக்கு அதிகபட்ச வயது வரம்பு கிடையாது.
சம்பளம் எவ்வளவு?
தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு ஊதிய விகிதம் லெவல் 11- படி வழங்கப்படும். அதாவது, மாதம் ரூ.35,400 - 1 லட்சத்து 30 ஆயிரத்து 400 வரை வழங்கப்படும். தேர்வு முறையை பொறுத்தவரை மெரிட் லிஸ்ட், சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்
விண்ணப்ப கட்டணமாக ரூ.600 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி உள்ளிட்ட பிரிவினருக்கு தேர்வுக்கட்டணம் ரூ.300 ஆகும். ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தேர்வர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முன்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஒருமுறைக்கு இருமுறை படித்து தெரிந்து கோள்ள வேண்டும். தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியான கல்வி தகுதி, இதர தகுதிகள் இருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். தகுதியற்ற விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?
ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் https://www.mrb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்;10.07.2025 ஆகும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.07.2025 ஆகும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.mrb.tn.gov.in/pdf/2025/LT_G2_MSS_10072025.pdf
-
எஸ்பிஐ வங்கியில் வேலை.. டிகிரி முடித்தவர்களுக்கு செம சான்ஸ்.. 7,150 பணியிடங்கள்.. தேதி முடிய போகுது -
சென்னை உட்பட.. 15 மாவட்டங்களுக்கு மழை! உஷார் மக்களே.. வானிலை மையம் வார்னிங்! -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்!












Click it and Unblock the Notifications