திருச்சி பெல் நிறுவனத்தில் வேலை.. பிஇ/பிடெக் முடிச்சவங்களுக்கு சூப்பர் சான்ஸ்! உடனே அப்ளை பண்ணுங்க
சென்னை: மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான திருச்சி பெல் நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ப்ராஜெக்ட் சூப்பர்வைசர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. பிஇ/பிடெக் முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். சம்பளத்தை பொறுத்தவரை குறைந்தது 45 ஆயிரம் முதல் 88 ஆயிரம் வழங்கப்படும்.
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று பெல். பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனம் என்று அழைக்கப்படும் பெல் நிறுவனம் மத்திய அரசின் கனரக தொழிற்சலை துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. புதுடெல்லியை தலைமையிடமாக கொண்டுள்ள பெல் நிறுவனம், மின்சார உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான கொதிகலன்கள், இயந்திரங்கள் உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்கிறது.

பெல் நிறுவனம் மத்திய அரசு பொதுத்துறை நிறுவனம் என்பதால், இந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியரக்ளுக்கு நல்ல சம்பளம் இதர சலுகைகள் அளிக்கப்படுகின்றன. திருச்சியில் உள்ள பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள 33 ப்ராஜெக்ட் சூப்பர்வைசர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந் த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். எப்படி விண்ணப்பிப்பது என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
1.ப்ராஜெக்ட் என்ஜினியர் (FTA -1) - 07
2. ப்ராஜெக்ட் என்ஜினியர் (FTA - 2) - 10
3. ப்ராஜெகட் சூப்பர்வைசர் (FTA - 3) - 04
4. ப்ராஜெகட் சூப்பர்வைசர் (FTA - 4) - 02
5. ப்ராஜெகட் சூப்பர்வைசர் (FTA - 5) - 10 என 33 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கல்வித் தகுதி:
ப்ராஜெக்ட் என்ஜினியர் பணிக்கு எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் என்ஜினியரிங் பட்டம் பெற்று இருக்க வேண்டும். குறைந்த பட்சம் சம்பந்தப்பட்ட துறையில் ஓராண்டு பணி அனுபவம் பெற்றிருத்தல் அவசியம்.
சூப்பர் வைசர் (FTA - 4) பணிக்கு மெக்கானிக்கல் என்ஜினியரிங் பிரிவில் டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். துறை சார்ந்த பிரிவில் ஓராண்டு பணி அனுபவம் பெற்றிருத்தல் அவசியம். கல்வி தகுதி பற்றிய முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் கல்வி அறிவிப்பில் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு
32 வயதுக்கு மிகாதவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள். அரசு விதிமுறைகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு. எஸ்.சி எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வுகள் அளிக்கப்படும்.
சம்பளம் எவ்வளவு?
ப்ராஜெக்ட் என்ஜினியர்: முதல் ஆண்டு - மாதம் ரூ.84,000, இரண்டாம் ஆண்டு ரூ.88,000
ப்ராஜெக்ட் சூப்பர்வைசர்: முதல் ஆண்டு மாதம் ரூ.45,000/, இரண்டாம் ஆண்டு ரூ.48,000- வழங்கப்படும்.
தேர்வு முறை:
மெரிட் லிஸ்ட், நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு தேர்வுக் கட்டணம் கிடையாது. இதர பிரிவினருக்கு ரூ.200 கட்டணம் ஆகும். தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 16.04.2025 ஆகும்.
ஆர்வம் உள்ள பட்டதாரிகள் தேர்வு அறிவிப்பினை ஒருமுறைக்கு இருமுறை படித்து விட்டு, தேவையான கல்வி தகுதி மற்றும் அனுபவம் இருப்பதை உறுதி செய்த பிறகு விண்ணப்பிக்கலாம். தேர்வு அறிவிப்பினை படிக்க: https://ednnet.bhel.in/FTARecruitment/FTA2025.pdf
-
திருப்பத்தூர் மாவட்டத்தில் வேலை.. 27,000 சம்பளம்.. 8ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications