For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கேந்திரிய வித்யாலயாவில் 4339 பணியிடங்கள் – விண்ணப்பிக்க இதுவே நேரம்!

Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நேரடி நியமான மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 4339

பதவி மற்றும் காலியிடங்கள் விவரம்:

அதிகாரிகள் மற்றும் ஆசிரியரல்லாத பணிகள்: 585

பணிகளின் பெயர்:

1. துணை முதல்வர் - 30

2. நிதி அலுவலர் - 01

3. உதவியாளர் - 75

4. கிளார்க் (UDC)- 153

5. லோயர் டிவிஷன் கிளார்க் (LDC) - 312

6. இந்தி மொழிபெயர்ப்பாளர் - 05

7. சுருக்கெழுத்தர் கிரோடு-II - 08

8. உதவி ஆசிரியர் - 01

ஆசிரியர் பணி மற்றும் காலியிடங்கள்: 3754

முதுகலை பட்டதாரி ஆசிரியர் (PGT) (குரூப் பி பணி) - 387

பயிற்சி பட்டதாரி ஆசிரியர்கள் (TGT) (குரூப் பி பணி) - 654

இதர கற்பித்தல் பணியிலிருந்து (குரூப் பி பணி) - 74

முதன்மை ஆசிரியர் மற்றும் மாற்ற அழைப்பு விடுத்தது (இசை) (குரூப் பி பணி) - 2639

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு, செயல்திறன் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: துணை முதல்வர் மற்றும் நிதி அலுவலர் பணிக்கு ரூபாய் 1,200, மற்ற அனைத்து பணிகளுக்கு ரூபாய் 750.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பம் உள்ளவர்கள் கேந்திரிய வித்யாலயாவின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.kvsangathan.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.06.2015

இதுபோன்ற மேலும் பல வேலைவாய்ப்புத் தகவல்களுக்கு எங்களின் http://jobs.oneindia.com/ இணையதளத்தினைப் பார்வையிடவும்.

English summary
Kendriya Vidyalaya Recruitment 2015 – Walk in for PGT, TGT, PRT & Other Posts. For more government and IT jobs see our oneindia jobs.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X