மாதம் ரூ.25 ஆயிரம் சம்பளம்.. லேப் டெக்னீசியன் பணிக்கு ரெடியா? மதுரை மண்டலத்தில் சூப்பர் வேலை!
மதுரை, தேனி, விருதுநகர், திண்டுக்கல் மாவட்டங்களில் காலியாக உள்ள லேப் டெக்னீசியன் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மதுரை: மதுரை, தேனி, விருதுநகர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் காலியாக உள்ள லேப் டெக்னீசியன் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு மருத்துவம் ஊரக நலப்பணிகள் துறையில் இருந்து வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்பவர்களுக்கு மாதம் ரூ.25 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
மதுரை மண்டல நிர்வாக மருத்துவ அலுவலர் கட்டுப்பாட்டில் மதுரை முனிச்சாலை, திருநகர், தேனி, திண்டுக்கல் மாவட்டம் பழனி, விருதுநகர் ஆகிய இடங்களில் தொஅஈ(தொழிலாளர் ஈட்டுறுதி திட்டம்) மருந்தகங்களில் லேப் டெக்னீசியன் பணிகள் நிரப்பப்பட உள்ளது.
இதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது . அதன்படி தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பித்து பணியை பெற முடியும். இந்த பணி தொடர்பான அறிவிப்பு வருமாறு:

காலியிடங்கள் எவ்வளவு?
மதுரை மண்டல மருத்துவம் ஊரக நலப்பணிகள் சார்பில் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி திட்டம் திட்டத்தின் மருந்தகங்களுக்கான லேப் டெக்னீசியன் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதன்படி மொத்தம் 5 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளது.

கல்வி தகுதி என்ன?
லேப் டெக்னீசியன் பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி, பல்கலைக்கழகங்களில் மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் பாடப்பிரிவில் 2 ஆண்டு பட்டயப்படிப்பை (டிப்ளமோ) முடித்திருக்க வேண்டும். இந்த கல்வி நிறுவனம் King Institute of Preventive Medicine, Chennai அல்லது தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்டு இருக்க வேண்டியது அவசியமாகும்.

வயது வரம்பு - சம்பளம் என்ன?
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் குறைந்தபட்சமாக 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்சம் என்றால் 59 வயதுக்குள் இருக்க வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.25,000 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படும். இது ஒரு தற்காலிக பணியாகும்.

விண்ணப்பம் செய்வது எப்படி?
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் மார்ச் 20ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பங்களை நேரடியாக அல்லது தபால் மூலம் மார்ச் 20ம் தேதி மாலை 5 மணிக்குள் ‛‛மண்டல நிர்வாக மருத்துவ அலுவலர் (தொ.அ.ஈ.தி), மண்டல நிர்வாக மருத்துவ அலுவலர், தொழிலாளர் அரசு ஈட்டுறுதி திட்டம், கேகே நகர், மதுரை - 625 020 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications