நெல்லை உள்பட 6 தென்மாவட்டங்களில் அசத்தலான வேலைவாய்ப்பு! அழைக்கும் எல்ஏடிசிஎஸ்.. நாளை கடைசி நாள்
சென்னை: தமிழ்நாட்டில் தென்மாவட்டங்களில் உள்ள சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை அமைப்பில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 8 ம் வகுப்பு முடித்தவர்கள், டிகிரி முடித்தவர்கள் இந்த பணிக்கு நாளை மாலை 5 மணிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் தான் கிரிமினல் வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளவர்களுக்கு உதவி செய்யும் வகையில் சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை அமைப்பு செயல்பட்டு வருகிறது.
இந்த அமைப்பானது தமிழ்நாட்டில் சட்ட சேவைகள் ஆணையத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் மாவட்ட சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை அமைப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. தற்போது தமிழ்நாட்டில் தென்மாவட்டங்களாக உள்ள தேனி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் காலியாக உள்ள 3 பிரிவுகளுக்கு தேவையான ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது. மொத்தம் 24 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தேனி-திருநெல்வேலி: தேனி மாவட்டத்தில் ஆபிஸ் அசிஸ்டென்ட்/ கிளர்க் பணிக்கு 2 பேர், ரிஷப்ஷனிஸ்ட் கம் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (டைப்பிஸ்ட்), ஆபிஸ் பியூன் பணிக்கு தலா ஒருவர் என மொத்தம் 4 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய இன்றே கடைசி நாளாகும். திருநெல்வேலி மாவட்டத்தில் ஆபிஸ் அசிஸ்டென்ட்/ கிளர்க் பணிக்கு 2 பேர், ரிஷப்ஷனிஸ்ட் கம் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (டைப்பிஸ்ட்), ஆபிஸ் பியூன் பணிக்கு தலா ஒருவர் என மொத்தம் 4 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தூத்துக்குடி-ராமநாதபுரம்: தூத்துக்குடி மாவட்டத்தில் ஆபிஸ் அசிஸ்டென்ட்/ கிளர்க் பணிக்கு 3 பேர், ரிஷப்ஷனிஸ்ட் கம் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (டைப்பிஸ்ட்), ஆபிஸ் பியூன் பணிக்கு தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆபிஸ் அசிஸ்டென்ட்/ கிளர்க் பணிக்கு 2 பேர், ரிஷப்ஷனிஸ்ட் கம் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (டைப்பிஸ்ட்), ஆபிஸ் பியூன் பணிக்கு தலா ஒருவர் என மொத்தம் 4 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
சிவகங்கை-ராமநாதபுரம்: சிவகங்கை மாவட்டத்தில் ஆபிஸ் அசிஸ்டென்ட்/ கிளர்க் பணிக்கு 2 பேர், ரிஷப்ஷனிஸ்ட் கம் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (டைப்பிஸ்ட்), ஆபிஸ் பியூன் பணிக்கு தலா ஒருவர் என மொத்தம் 4 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் ஆபிஸ் அசிஸ்டென்ட்/ கிளர்க், ரிஷப்ஷனிஸ்ட் கம் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (டைப்பிஸ்ட்), ஆபிஸ் பியூன் பணிக்கு தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கல்வி தகுதி என்ன: ஆபிஸ் அசிஸ்டென்ட் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் டிகிரி முடித்திருக்க வேண்டும். மேலும் கம்ப்யூட்டர் அறிவு பெற்றிருப்பதோடு நிமிடத்துக்கு 40 எழுத்துகள் டைப் செய்யும் திறன் கொண்டிருக்க வேண்டும். ரிசப்ஷன் கம் டேட்டா என்ட்ரி பணிக்கு விண்ணப்பம் செய்வோர் டிகிரி முடித்திருப்பதோடு, நல்ல உரையாடல் திறன் கொண்டிருக்க வேண்டும். டெலிபோன், பேக்ஸ் கையாளும் திறன் பெற்றிருக்க வேண்டும். அதோடு டைப்பிங் திறமையும் இருக்க வேண்டும். ஆபிஸ் பியூன் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 8 ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
மாதசம்பளம் என்ன: இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு தாங்கள் பணியாற்றும் நகரை பொறுத்து சம்பளம் வழங்கப்படும். ஆபிஸ் அசிஸ்டென்ட்/கிளர்க், ரிசப்ஷனிஸ்ட் கம் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (டைப்பிஸ்ட்) பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படும். ஆபிஸ் பியூன் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ரூ.12 ஆயிரம் முதல் ரூ.14 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும்.
நாளை கடைசி நாள்: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து அதில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு வரும் 16ம் தேதி(நாளை) மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்களை அனுப்பும்போது படிப்பு சான்றிதழ்களுடன், பிற ஆவணங்களை இணைத்து அனுப்ப வேண்டும். இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் மாவட்ட முதன்மை நீதிபதி மற்றும் செசன்ஸ் நீதிபதியின் தலைமையிலான குழுவினரால் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். மாவட்ட வாரியாக விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்குகளில் உள்ளது.
தேனி மாவட்ட பணி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
தேனி மாவட்ட பணிக்கான விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய Click Here
திருநெல்வேலி மாவட்ட பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
தூத்துக்குடி மாவட்ட பணியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு, விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய Click Here
ராமநாதபுரம் மாவட்ட பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய Click Here
சிவகங்கை மாவட்ட பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய Click Here
விருதுநகர் மாவட்ட பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
-
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது!












Click it and Unblock the Notifications