மாத ஊதியம் ரூ.30000-ரூ.1.80 லட்சம்.. அழைக்கும் மத்திய அரசு பணி.. விண்ணப்பம் செய்வது எப்படி?
டெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் எனும் நிறுவனத்தில் மாதம் சம்பளம் ரூ.30 ஆயிரம் ரூ.1.80 லட்சம் வரையிலான சம்பளத்தில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு டிகிரி, டிப்ளமோ, என்ஜினீயரிங் படித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
மத்திய மின்சாரத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் Power Finance Corporation Limited உள்ளது. இங்கு தற்போது ஏராளமான பணியிடங்கள் காலியாக உள்ளன.
இந்த காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன் முக்கிய விபரங்கள் வருமாறு:

காலியிடங்கள் எவ்வளவு?
பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் மொத்தம் 22 பணியிடங்கள் காலியாக உள்ளன. அதன்படி உதவி அதிகாரி பணிக்கு 4 பேர், துணை அதிகாரி பணிக்கு 2 பேர், வெவ்வேறு உதவி மேலாளர் பணிக்கு 16 பேர் என மொத்தம் 22 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

வயது வரம்பு என்ன?
உதவி அதிகாரி பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 34 வயதுக்குள்ளும், துணை அதிகாரி பணிக்கு பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 35 வயதுக்குள்ளும், உதவி மேலாளர் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 31 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி என்ன?
உதவி அதிகாரி பணிக்க விண்ணப்பம் செய்ய விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம், கல்லூரிகளில் HR/Admin பிரிவுகளில் பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். துணை அதிகாரி பணிக்கு சிவில், எலக்ட்ரிக்கல் பிரிவில் என்ஜினீயரிங் அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். உதவி மேலாளர் பணிக்கு பிஇ/பிடெக் கம்யூட்டர் சயின்ஸ்/ஐடி படிப்பை முடித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் எம்சிஏ/பிஜிடிசிஏ படிப்பை முடித்திருக்க வேண்டும்.

மாத சம்பளம் எவ்வளவு?
இதில் உதவி அதிகாரி பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத சம்பளம் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.1.20 லட்சம் வரை கிடைக்கும். துணை அதிகாரி பணிக்கு ரூ.40 ஆயிரம் முதல் ரூ.1.40 லட்சம் வரையும், உதவி மேலாளர் பணிக்கு மாதம் ரூ.60 ஆயிரம் முதல் ரூ.1.80 லட்சம் வரையும் சம்பளம் கிடைக்கும்.

விண்ணப்பம் செய்வது எப்படி?
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும். அதிகாரப்பூர்வ இணையதளமான pfcindia.com மூலம் விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்ய அக்டோபர் 14ம் தேதி கடைசிநாளாகும். விண்ணப்ப கட்டணமாக ரூ.500 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத் திறனாளிகள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.மேலும் கூடுதல் விபரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்த்து அறிந்து கொள்ள வேண்டும்.
அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல Click Here
அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here











Click it and Unblock the Notifications