அனுபவம் தேவையில்லை.. சென்னை ஐடி நிறுவனத்தில் அசத்தலான வேலை.. மிஸ் பண்ணாதீங்க
சென்னை: குவால்ஹம் ஐடி நிறுவனத்தில் அசோசியேட் இன்ஜினியர் (Associate Engineer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம்.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சான்டியாகோவை தலைமையிடமாக கொண்டு குவால்ஹம்(Qualcomm) ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.. இந்த நிறுவனம் டெலாவர் நிறுவனத்தின் ஒரு பகுதியாக செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனம் செமி கண்டக்டர்ஸ், சாப்ட்வேர் மற்றும் வயர்லெஸ் டெக்னாலஜி சார்ந்த சேவைகளை வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்துக்கு நம் நாட்டிலும் அலுவலகம் உள்ளது.
தமிழ்நாட்டில் சென்னையில் குவால்ஹம் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து தற்போது புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு:
குவால்ஹம் நிறுவனத்தில் அசோசியேட் இன்ஜினியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் அல்லது தொடர்புடைய பிரிவில் டிகிரி படிப்பை முடித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் இன்ஜினியரிங், இன்பர்மேஷன் சிஸ்டம்ஸ் படிப்புகளை முடித்தவர்களும் விண்ணப்பம் செய்யலாம்.
குறிப்பாக இந்த பணிக்கு 0-1 ஆண்டு வரை Embedded platform test-ல் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இன்டர்ன்ஷிப் அனுபவம் என்றால் Cloud AI/ML இருப்பது பிளஸ் பாயிண்ட்டாகும். இதன்மூலம் பணி அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பம் செய்யலாம். பணி அனுபவம் இல்லாவிட்டால் அவர்களுக்கு சில முக்கிய தகுதிகள் இருக்க வேண்டும்.
அதன்படி ஸ்கிரிப்டிங் லேங்குவேஜ் மற்றும் ஓஓபி கான்செப்ட்ஸ் தெரிந்திருக்க வேண்டும். அதாவது பைத்தான், shell Scripting தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் ML/DL/LLM ஆர்க்கிடெக்ச்சர் பற்றி நல்ல அறிவு பெற்றிருக்க வேண்டும். மேலும் எல்எல்எம்-ஸ், AI இன்பர்என்சிங் சொல்யூஷன்ஸ் (vLLM/Triton/Dynamo/etc..) உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும்.
அதேபோல் Debugging மற்றும் அனலிசிஸ் ஸ்கிஸ் இருக்க வேண்டும். அதேபோல் பிரச்சனைகளை தீர்க்கும்திறன் இருப்பதோடு, புதிய டெக்னாலஜியை கற்கும் திறமை இருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் குறித்த விவரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.
அதேபோல் இந்த பணிக்கான அறிவிப்பு கடந்த மாதம் 30ம் தேதி வெளியானது.15 நாட்கள் கடந்துவிட்டது. விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம். எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications