Work From Home.. பணி அனுபவம் இல்லாவிட்டாலும் விண்ணப்பிக்கலாம்.. அழைக்கும் ஐடி நிறுவனம்
சென்னை: அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்தே பணியாற்றுவதற்கான வாய்ப்பை ஐடி நிறுவனம் வழங்கி உள்ளது. இந்த பணிக்கு முன்அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பம் செய்யலாம்.
தற்போது பல்வேறு ஐடி நிறுவனங்களும் ‛வொர்க் ஃப்ரம் ஹோம்‛ ஆப்ஷனை நீக்கி விட்டன. இதனால் ஊழியர்கள் அலுவலகம் சென்று வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் சில நிறுவனங்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற ஊழியர்களுக்கு வாய்ப்பு வழங்கி வருகிறது.

இந்த லிஸ்ட்டில் வெகுசில நிறுவனங்கள் மட்டுமே உள்ளன. இப்படியான சூழலில் தான் Smollan நிறுவனத்தில் இருந்து வீட்டில் இருந்தே பணியாற்ற தேவையான ஆட்களை தேர்வு செய்ய உள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:
Smollan ஐடி நிறுவனத்தில் தற்போது QA Engineer (Manual) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் அதிகபட்சமாக 4 ஆண்டு வரை Manual Testing பிரிவில் பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். அதேபோல் பணி அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பம் செய்யலாம். ஆனால் அவர்களுக்கு சில முக்கிய தகுதிகள் என்பது வேண்டும்.
அந்த வகையில் Creating and executing test plansand Cases பணி தெரிந்திருக்க வேண்டும். எஸ்டிஎல்சி (SDLC) மற்றும் எஸ்டிஎல்சி (STLC), டிஃபக்ட் லைப் ஸ்டைல் உள்ளிட்டவற்றில் நல்ல அறிவு பெற்றிருக்க வேண்டும். அதேபோல் Smoke, Sanity, Integration, Regression உள்ளிட்ட டெஸ்ட்டிங் டைப்ஸ் தெரிந்திருக்க வேண்டும்.
மேலும் Agile Frameworks மற்றும் Regression Tesing உள்ளிட்டவை தெரிந்திருந்தால் பிளஸ் பாயிண்ட்டாகும். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்த விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படலாம்.
பணிக்கு தேர்வாகும் நபர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றலாம். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் Smollan நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வழியாக விண்ணப்பம் செய்யலாம்.
விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் காலஅவகாசம் முடிவுக்கு வரலாம். எனவே தகுதியானவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications