Railway Jobs: தெற்கு ரயில்வேயில் வேலை.. 4,308 பணியிடங்கள்.. 10, 12 ஆம் வகுப்பு தகுதி தான்.. நாளை தான் கடைசி நாள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தெற்கு ரயில்வேயில் 4,308 அப்ரெண்டீஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்த நிலையில் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை தான் கடைசி நாள் ஆகும். எனவே இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும். 10, 12 ஆம் வகுப்பு மற்றும் ஐடிஐ முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். மேலும் தேர்வு செய்யப்படுபவர்கள் சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் பணியமர்த்தப்படுவார்கள். தேர்வு கிடையாது. சான்றிதழ் சரிபார்ப்பு, மெரிட் லிஸ்ட் மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

நாட்டின் மிகப்பெரிய அரசு துறை நிறுவனமாக இந்தியன் ரயில்வே உள்ளது. ரயில்வேயில் ஏற்படும் காலிப்பணியிடங்களை ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் உரிய அறிவிப்பினை வெளியிட்டு நிரப்பி வருகிறது. அந்த வகையில், தற்போது அப்ரெண்டீஸ் எனப்படும் 4,308 பயிற்சி பணியிடங்களுக்கான அறிவிப்பை ரயில்வே வெளியிட்டுள்ளது.

Southern Railway rrb job jobs employment

பணியிடங்கள் விவரம்:

ஃபிட்டர், பெயிண்டர், வெல்டர், மெடிக்கல் லேப் டெக்னிஷியன் (ரோடியோலாஜி, கார்டியோலாஜி) எலக்ட்ரிஷியன், ஸ்டெனோகிராபர் உள்ளிட்ட பிரிவுகளில் மொத்தம் 4,308 காலியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

கல்வித் தகுதி:

கல்வித் தகுதியை பொறுத்தவரை, 10 வகுப்பு, 12 ஆம் வகுப்பு மற்றும் ஐடிஐ படித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். துறை சார்ந்த பிரிவில் ஐடிஐ முடித்து இருக்க வேண்டும். ஃபிரஷர் கேட்டகிரியில் விண்ணப்பிப்பவர்கள் எஸ்.எஸ்.எல்.சி முடித்து இருந்தால் போதும். குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பயிற்சி காலம்:

வெல்டர் - 1 ஆண்டு 3 மாத காலம்,
ஃபிட்டர், பெயிண்டர் - 2 ஆண்டுகள்
மெடிக்கல் லேப் - 1 ஆண்டுகள் 3 மாத அனுபவம்

வயது வரம்பு:

வயது வரம்பை பொறுத்தவரை, 27.09.2026 அன்று தேதிப்படி 15 வயது முதல் 22 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். எஸ்சி எஸ்டி பிரிவினர் என்றால் 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினர் என்றால் 3 ஆண்டுகளும் என வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.

ஊதியம் எவ்வளவு:

ஃபிரஷர் -களுக்கு மாதம் ரூ.8,200 ஊதியமாக வழங்கப்படும்.
எக்ஸ் ஐடிஐ தகுதி பணிகளுக்கு ரூ.9,600 ஊதியம் வழங்கப்படும்.
12 ஆம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட பணிகளுக்கு ரூ.9,600 ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு முறை:

இந்த பணியிடங்களுக்கு தேர்வு கிடையாது. மெரிட் லிஸ்ட், சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியும் ஆர்வமும் இருப்பவர்கள் தேர்வு அறிவிப்பை படித்து உறுதி செய்து கொண்டு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை 27 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தான் கடைசி நாள் ஆகும். எனவே இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும்.

விண்ணப்ப கட்டணத்தை பொறுத்தவரை ரூ.100 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் கிடையாது. ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

சென்னை கோவியில் பணியிடம்:

தேர்வு செய்யப்படுபவர்கள், சென்னை, மதுரை, திருச்சி, பெரம்பூர், கோவை, அரக்கோணம், பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய இடங்களில்பணி நியமனம் செய்யப்படுவார்கள்.

தேர்வு அறிவிப்பை படிக்க: https://sr.indianrailways.gov.in/

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+