மாதம் 1.75 லட்சம் சம்பளம்.. தமிழ் வழியில் ஜப்பானிய மொழியை படிக்க தமிழக அரசு தரும் சூப்பர் வாய்ப்பு
சென்னை: தமிழ் வழியில் ஜப்பானிய மொழி படிக்க அருமையான வாய்ப்பை நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழக அரசு வழங்கி உள்ளது. ஜப்பானிய மொழியை கற்றுக்கொண்டால், இந்தியாவில் உள்ளதைவிட 6 மடங்கு வரை அதிக சம்பளம் கிடைக்கும். ஜப்பானுக்கு 18 லட்சம் பேர் வேலைக்கு ஆட்கள் தேவை என்கிற நிலையில், கற்றுக்கொள்பவர்களுக்கு சிறப்பான எதிர்காலம் நிச்சயம் உண்டு என்கிறார்கள்.
தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் மூலம், தமிழ் வழியில் ஜப்பானிய மொழி கற்றுத் தரப்படுகிறது. ஜப்பான் நாட்டில் கிடைக்கும் ஏராள வேலை வாய்ப்புகளை பெறுவதற்காக இந்த திட்டம் நிச்சயம் உதவும். ஆங்கிலமே சரளமாக பேச முடியாத என்னால் எப்படி ஜப்பானிய மொழியை கற்று சரளமாக பேச முடியும் என்ற எண்ணம் பலருக்கும் இருக்கும்.

ஜப்பான் மொழி எளிது: ஆனால் இதுபற்றி ஜப்பானில் உள்ள தமிழர்கள் கூறும் போது, உங்களால் தமிழ் மொழியை சரளமாக பேச முடிந்தால், நிச்சயம் ஜப்பான் மொழியை பேச முடியும் என்கிறார்கள். ஆங்கிலமே சரளமாக பேச முடியவில்லை என்றாலும், ஜப்பான் மொழியை கற்றுக்கொண்டு தமிழர்களால் நிச்சயம் சரளமாக பேச முடியும் என்கிறார்கள். ஏனெனில் தமிழ் மொழியும், ஜப்பானிய மொழியும் ஒத்துப்போகிறதாம்.. தமிழ் இலக்கணம், உயிர் எழுத்துக்கள் போன்றவை ஒத்துப்போகிறது என்கிறார்கள்.
ஜப்பான் மொழியை கற்றுக்கொண்டால் என்ன பயன்: உலகில் வளர்ந்த நாடுகளில் ஒன்று ஜப்பான். நல்ல வேலைவாய்ப்பு, நல்ல சம்பளம், தரமான கல்வி, மிகச்சிறப்பான எதிர்காலம் போன்றவை உறுதியாக கிடைக்கும். ஏனெனில் ஜப்பானில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் உள்ளன. அங்கு புதிய கண்டுபிடிப்புகள் உருவாகி கொண்டே இருக்கின்றன. இதன் காரணமாக தொழிற்சாலைகள் அதிக அளவில் வளர்ந்து கொண்டே இருக்கின்றன. நல்ல கல்வி அறிவு, சுயஒழுக்கம் அதிகம் உள்ள நாடு என்பதால், அங்கு தொழில் நிறுவனங்களும் அதிகமாக முதலீடுகள் செய்கின்றன. இதன் காரணமாக ஜப்பானில் வேலைவாய்ப்புகள் மிக அதிகம்.
என்ன வேலைகள் அதிகம்: குறிப்பாக சொல்வது என்றால், ஜப்பானில் ஸ்கில்டு மேன்பவர் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும், தொழில்நுட்ப பணியாளர்கள் 18 லட்சம் பேர் தேவைப்படுகிறார்கள். அவ்வளவு பணியாளர்கள் அந்த நாட்டில் இல்லை.. இதன் காரணமாக ஜப்பான் நாடு, ஜப்பான் மொழி தெரிந்தவர்களை தேவையான வேலைக்கு எடுத்துக் கொள்கிறது. எலக்ட்ரிக்கல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், செமிகண்டக்டர் உற்பத்தியில் அதிக வேலைவாய்ப்புகள் உள்ளன. இதேபோல் மெக்கானிக்கல், ஏஐ, எம்எல் போன்ற துறைகளிலும் வேலைக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள். ஹோட்டல் மேனேஜ்மெண்ட், ஹாஸ்பிட்டாலிட்டி, நர்சிங் உள்பட பல்வேறு துறைகளில் வேலைக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள்.

ஜப்பானில் சம்பளம் எப்படி: ஜப்பானில் எந்த வேலைக்கும் இந்தியாவில் உள்ளதைவிட 3 முதல் 6 மடங்கு அதிக சம்பளம் கிடைக்கும். உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால், என்ஜினியர்கள் என்2 லெவல் என்றால் ஆண்டுக்கு 21 லட்சம் சம்பளம் கிடைக்கும். என்ஜினியர் அல்லாத என்4 லெவல் பணிகள் என்றால் 12 முதல் 15 லட்சம் சம்பளம் கிடைக்கும். இதுதவிர பல்வேறு சலுகைகள் கிடைக்கும். ஜப்பானில் உள்ள வேலைவாய்ப்பை அறிந்து அந்த மொழியை கற்க பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள்.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு தமிழ் வழியில் ஜப்பானிய மொழி படிக்க அருமையான வாய்ப்பை நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வழங்கி உள்ளது. ஜப்பான் மொழியை இலவசமாக கற்று தருகிறது. விருப்பம் உள்ளவர்கள் ஸ்கேன் செய்து பதிவு செய்யலாம். அல்லது லிங்கில் சென்று பதிவு செய்து கொள்ளலாம். ரிஜிஸ்ட்ரேசன் அக்டோபர் 15ம் தேதியுடன் முடிகிறது. வாரத்தில் ஐந்து நாட்கள், தினமும் 2 மணி நேரம் வகுப்பு நடைபெறும். டிகிரி பிடித்தவர்களும், டிப்ளமோ, ஐடிஐ படித்தவர்களும் ஜப்பான் மொழி கற்க விண்ணப்பிக்கலாம். என்5 லெவல் கற்க 3 மாத பயிற்சி, என்4 லெவல் கற்க 3 மாத பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. டிசம்பர் முதல் பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்க உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeQbhsdAOXydQLVtHkZjgVpnWnszG90L8FmrgaZ0KLxxg836Q/viewform லிங்கில் பதிவு செய்யலாம்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications