தமிழ்நாடு கிராம வங்கியில் வேலை.. டிகிரி போதும்! ஐபிபிஎஸ் வெளியிட்ட அறிவிப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு கிராம வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அலுவலக உதவியாளர், மேலாளர் உள்பட பல்வேறு பதவிகளில் தமிழகத்தில் மட்டும் 464 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. நாடு முழுக்க மொத்தம் 13,715 காலிப்பணியிடங்கள் நிரப்ப்படுகின்றன. டிகிரி முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வங்கி பணிகளுக்கான ஆட்சேர்ப்பு அமைப்பாக ஐபிபிஎஸ் உள்ளது. எஸ்பிஐ தவிர்த்து நாட்டில் உள்ள இதர பொதுத்துறை வங்கிகளுக்கு ஐபிபிஎஸ் மூலமே ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பேங்க் ஆப் பரோடா, கனரா வங்கி என நாட்டில் உள்ள முன்னணி பொதுத்துறை வங்கிகளும் கிளர்க் உள்ளிட்ட பணியிடங்களை பெரும்பாலும் ஐபிபிஎஸ் மூலம் மட்டுமே மேற்கொள்கின்றன.

Tamil Nadu Gramin Bank IBPS job job bank job employment

நாடு முழுவதும் கிராமப்புற மக்களுக்கு எளிதாக வங்கி சேவை கிடைக்கும் வகையில் தொடங்கப்பட்டு இருக்கும் கிராம வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்களை தேர்வு செய்யவும் ஐபிஎபிஎஸ் மூலமே ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. அந்த வகையில் தற்போது தமிழ்நாடு கிராம வங்கி உள்ளிட்ட நாடு முழுவதும் 28 கிராம வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

பணியிடங்கள்: (தமிழ்நாடு மட்டும்)

அலுவலக உதவியாளர்கள் - 244
அதிகாரி நிலை I - 90
அதிகாரி நிலை II (பொது வங்கி அதிகாரி) - 49
அதிகாரி நிலை II (தகவல் தொழில்நுட்பம் - IT) - 11
அதிகாரி நிலை II (பட்டயக் கணக்காளர் - CA) - 02
அதிகாரி நிலை II (சட்டம்) - 05

அதிகாரி நிலை II (கருவூல மேலாளர்) - 02
அதிகாரி நிலை II ( மார்க்கெட்டிங் அதிகாரி - MO) - 02
அதிகாரி நிலை II (வேளாண்மை அதிகாரி) - 11
அதிகாரி நிலை III (சீனியர் மேலாளர் ) - 48
என 464 இடங்கள் நிரப்பப்படுகின்றன.
நாடு முழுவதும் சேர்த்து 13,715 இடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளன.

கல்வித் தகுதி:

பணிக்கு தகுந்தபடி கல்வித் தகுதி மாறுபடும். அலுவலக உதவியாளர் பணிக்கு ஏதாவது ஒரு டிகிரி போதும். உள்ளூர் மொழி நன்கு தெரிந்து இருக்க வேண்டும். கணினி இயக்க தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை தரப்படும்.

இதர பணியிடங்களுக்கு துறை சார்ந்த பிரிவில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும். வேளாண் அதிகாரி உள்ளிட்ட பணியிடங்களுக்கு வேளாண் படிப்பில் டிகிரி முடித்து இருப்பதோடு இரண்டு ஆண்டுகள் அனுபவமும் அவசியம். தேர்வர்கள் விண்ணப்பிக்கும் முன்பாக அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பை படித்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.

வயது வரம்பு:

அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு 18 வயது முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அதிகாரி நிலை - I (AM) - 18 முதல் 30 வயது வரை
அதிகாரி நிலை - II (மேலாளர்) - 21 முதல் 32 வயது வரை
அதிகாரி நிலை- III (மூத்த மேலாளர்) - 21 முதல் 40 வயது வரை
அரசு விதிமுறைகளின் படி வயது உச்ச வரம்பில் சலுகைகளும் தரப்படும்.

தேர்வு முறை:

முதல் நிலை தேர்வு, மெயின்ஸ் தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக ரூ.850 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி உள்ளிட்ட பிரிவினருக்கு ரூ.175 கட்டணம் ஆகும்.

விண்ணப்பிக்க வரும் 21.09.2026 கடைசி நாள் ஆகும். முதல் நிலை தேர்வு நவம்பர் 2026 இல் நடக்கும். ஆன்லைன் டெஸ்ட் வரும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் நடைபெறும்.

தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.ibps.in/wp-content/uploads/Window-Notification_CRP-RRBs-XV.pdf

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+